இலங்கை மத்திய வங்கி, 1950 ஓகத்தில் அதன் தொழிற்பாடுகளைத் தொடங்கி இலங்கையின் சுபீட்சத்திற்கு அதன் தனித்துவமும் பெறுமதிவாய்ந்ததுமான பங்களிப்பின் 70 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. அதன் 70 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் முகமாக 2020 திசெம்பர் 31 அன்று ரூ.20 வகை சுற்றோட்டத்திற்கு விடப்படாத ஞாபகார்த்த குற்றி (அலுமீனிய வெண்கலம்) ஒன்றினை வெளியிட்டது. இதற்குச் சமாந்தரமாக மேற்குறித்த சுற்றோட்டத்திற்கு விடப்படாத ஞாபகார்த்தக் குற்றியினை ஒத்த வடிவத்துடன் கூடிய ரூ.20 வகை சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்தக் குற்றியொன்றினை (நிக்கல் பூசப்பட்ட உருக்கு) வெளியிடுவதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. நாணயத்தின் விரிவான விபரம் மற்றும் உற்பத்திக் குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது.















