இலங்கையில் மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்வதிலுள்ள இடர்நேர்வுகள் மீதான பொதுமக்கள் விழிப்புணர்வு

பன்னாட்டு மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் மெய்நிகர் நாணயத்தின் பயன்பாடு தொடர்பான அண்மைய விசாரணைகளைப் பரிசீலனையில் கொண்டு, இலங்கை மத்திய வங்கி மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்வதுடன் சேர்ந்து காணப்படும் இடர்நேர்வுகள் பற்றி பொதுமக்களுக்கு அறிவிக்க விரும்புகிறது.

“மெய்நிகர் நாணயங்கள்” என்பது தனியார் நிறுவனங்களினால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் அடையாளங்களாகும். இவற்றை வார்ப்படம் செய்தல், ஆரம்பக் குற்றிகளை முன்வைத்தலூடாக அல்லது மெய்நிகர் நாணயப் பரிவர்த்தனைக;டாக அதேநேர இணைய வழியில் பெற்றுக்கொள்ள முடியும். மெய்நிகர் நாணயங்கள் பொதுவாக மறைகுறி நாணயங்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றன. பிரபல்யமான மெய்நிகர் நாணயங்கள் பிட்கொயின் (Bitcoin), எதேறியம்(Ethereum),  லிட்கொயின் (Litecoin)  என்பனவற்றை உள்ளடக்கியுள்ளன. மெய்நிகர் நாணயங்கள் BITCoin இற்காக BitCoins, எதேறியத்திற்காக (Ethereum),  எதேர்ஸ் (ethers), என அவற்றின் சொந்தப் பெறுமதி இன நாணயங்களைக் கொண்டிருப்பதுடன், மத்திய வங்கிகளினால் வெளியிடப்பட்ட நாணயங்களில், உதாரணமாக ஐ.அ.டொலர், யப்பானிய யென் போன்ற நாணயங்களில் மெய்நிகர் நாணயங்களின் பரிவர்த்தனைகளில் வழமையாக மதிப்பிடப்படுகின்றன. எனினும், மெய்நிகர் நாணயங்கள் மத்திய வங்கிகளினால் வெளியிடப்படுவதில்லை என்பதனையும் அவை பொதுவாக எந்தவொரு அடிப்படைச் சொத்தினாலும் உத்தரவாதப்படுத்தப்படுவதில்லை என்பதனையும் கவனிப்பது முக்கியமானதாகும். ஆகவே, அவற்றின் பெறுமதி, மெய்நிகர் நாணயப் பரிவர்த்தனை தொடர்பான பொதுமக்களின் ஊகம் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.

இலங்கையில் மெய்நிகர் நாணயங்களின் பயன்பாடு, முதலீடு அல்லது வணிகம் தொடர்பாக ஒழுங்குமுறைப்படுத்தல் பாதுகாப்புக்கள் எதுவுமில்லை. ஆகவே, மெய்நிகர் நாணயங்களில் முதலீடு செய்வதோ அல்லது பயன்படுத்துவதோ பின்வருவன போன்ற இடர்நேர்வுகளை ஏற்படுத்தும்.

அ)எவரேனும் பயன்படுத்துநர் அல்லது கொடுக்கல்வாங்கல் தொடர்பில் பிரச்சனைகள் அல்லது பிணக்குகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பயன்படுத்துநர்/ முதலீட்டாளர்கள் ஒழுங்குமுறைப்படுத்தல் அல்லது குறித்துரைக்கப்பட்ட சட்ட ரீதியாக நாடும் இடங்களைக் கொண்டிருக்கமாட்டார்கள். 

ஆ)மெய்நிகர் நாணயங்கள் ஊகத்தின் மீது தங்கியிருப்பதனால் அவற்றினது பெறுமதியின் உயர் தளம்பல்களை மெய்நிகர் நாணயங்களின் முதலீட்டினை இழப்பீடுகளுக்குள்ளாக்கி பாரிய இழப்புக்களை ஏற்படுத்துகின்றன.

இ)மெய்நிகர் நாணயங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியிடுவதுடன் இணைந்து காணப்படுவதற்கான உயர்ந்தளவு சாத்தியத்தன்மை காணப்படுவதுடன் இது குற்றவாளிகளினால் குற்றப்பணத்தினை தூய பணமாக மாற்றிக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

ஈ)வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகளை மீறுதல். மெய்நிகர் நாணயங்கள் பரிவர்த்தனையின் போது சொத்துக்களாக வர்த்தகப்படுத்தப்படுவதனால் வெளிநாடுகளிலிருந்து மெய்நிகர் நாணயங்களைக் கொள்வனவு செய்வது வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகளை மீறுவதற்கு வழிவகுக்கும். ஏனெனில் மெய்நிகர் நாணயம் 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் நியதிகளில் அனுமதிக்கப்பட்ட முதலீட்டு வகையொன்றாக அடையாளம் காணப்பட்டிருக்கவில்லை. இலங்கையிலுள்ள வெளிநாட்டுச் செலாவணி ஒழுங்குவிதிகளின் நியதிகளில் மெய்நிகர் நாணயக் கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் வெளிநாட்டு நாணயத்தில் கொடுப்பனவுகளைச் செய்வதற்கு பற்று அட்டைகள், கொடுகடன் அட்டைகளைப் போன்ற இலத்திரனியல் நிதிய மாற்றல் அட்டைகள் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கப்படமாட்டா.

ஆகவே, மெய்நிகர் நாணயங்களில் முதலீடுகளைச் செய்வது பயன்படுத்துநர்களுக்கும் அதேபோன்று பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்களவு நிதியியல், தொழிற்பாட்டு, சட்ட, வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான இடர்நேர்வுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி பொதுமக்கள் எச்சரிக்கைப்படுகின்றனர். மறைகுறி நாணயங்கள் உட்பட, மெய்நிகர் நாணயங்கள் தொடர்புபட்ட திட்டங்களை தொழிற்படுத்துவதற் எந்தவொரு நிறுவனத்திற்குமோ அல்லது கம்பனிக்குமோ இலங்கை மத்திய வங்கி எந்தவொரு உரிமத்;தினையோ அதிகாரவளிப்புக்களையோ வழங்கவில்லை என்பதனையும் அத்துடன் ஏதேனும் ஆரம்ப நாணயக் குற்றிகளை வழங்குதல், குற்றிகளை வார்ப்படம் செய்தல் தொழிற்பாடுகளுக்கு அல்லது மெய்நிகர் நாணயப் பரிவர்த்தனைகளுக்கு அதிகாரமளிக்கப்படவோ இல்லை என்பதனையும் பொதுமக்களுக்கு அறியத்தர விரும்புகிறோம்.

 

Published Date: 

Friday, April 9, 2021