சேதமடைந்த நாணயத்தாள்களினை மாற்றுதல்
நாட்டின் பல பாகங்களிலிருந்தும், தவிர்க்க முடியாத சூழ்நிலையின் விளைவாக மாத்திரமின்றி வேண்டுமென்றே உருச்சிதைத்தல்/ சேதப்படுத்தலின் விளைவாகவும் உருச்சிதைக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான நாணயத்தாள் இலங்கை மத்திய வங்கிக்கு நாளாந்தம் கிடைக்கப்பெறுகின்றன. அதிகூடிய பாதுகாப்பு நுட்பங்களின் உள்ளடக்கத்துடன்கூடிய இத்தாள்களை அச்சிடுவதில் ஏற்படுகின்ற அதிகசெலவினை கருத்தில்கொண்டு புளக்கத்திலுள்ள நாணயத்தாள்கள் சேதப்படுத்தாது மற்றும் உருச்சிதைக்காது சாத்தியமான அளவிற்கு மிக கவனமாக கையாளுவது சமூகத்தின் பொறுப்பொன்றாக விளங்குகின்றது. கொடுக்கல்வாங்கல்களுக்காக தூய்மையான நாணயத்தாள்களை விநியோகிப்பதற்கு இலங்கை மத்திய வங்கி பெரும்முயற்சிகளை எடுக்கின்றது. நாணயத் தாள்களையும் நாணயக் குத்திகளையும் பாதுகாக்கின்ற மற்றும் தூய்மையாக பேணுகின்ற விதத்தில் அவற்றைக் கையாளுவது பிரசைகளான எமது கடமையாகும்.
பொருத்தமற்ற, சேதமாக்கப்பட்ட அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத்தாள்களை புதிய நாணயத்தாள்ளுக்கு எவ்வாறு மாற்றுவது?
பொதுமக்கள், சேதமடைந்த அல்லது உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்கைளை நாடு முழுவதும் பரந்துள்ள உரிமம் பெற்ற எந்தவொரு வர்த்தக வங்கியிலும் மாற்றிக் கொள்ளமுடியும். மாற்றுமுறையொன்றாக பொதுமக்கள் உருச்சிதைக்கப்பட்ட நாணயத் தாள்களைத் பதிவுத் தபால் மூலம் மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கலாம் அல்லது திங்கட்கிழமையிலிருந்து வெள்ளிக்கிழமை வரை வங்கி விடுமுறை நாட்கள் தவிர 9.30 மணியிலிருந்து 12.30 மணி வரையான காலப்பகுதியில் இல.30 சனாதிபதி மாவத்தை, கொழும்பு 01 என்ற முகவரியிலுள்ள இலங்கை மத்திய வங்கியின் சேதமடைந்த நாணயத்தாள் மாற்றும் காசுக் கருமபீடத்திற்கு நேரடியாக வந்து மாற்றிக் கொள்ளமுடியும். உருச்சிதைக்கப்பட்ட அல்லது சேதமடைந்த நாணயத் தாள்களுக்கான கொடுப்பனவு நடைமுறைகள் நாணய விதிச் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ளதுடன் பெறுமதியினை மீட்டுக் கொள்வது இச்சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல் நியதிகளின்படி மேற்கொள்ளப்படும்.
வேண்டுமென்றே உருச்சிதைக்கப்பட்ட அல்லது மாற்றம் செய்யப்பட்ட அல்லது உருக்குலைக்கப்பட்ட நாணயத்தாள்களுக்கு 2017/12/31 திகதியின் பின்னர் இலங்கை மத்திய வங்கி கொடுப்பனவுகளை வழங்காது.
பொதுமக்கள் நாணயமாற்றுக் கருமபீடம்
212/63, கேஸ் வேர்க்ஸ் வீதி,கொழும்பு 11 என்ற விலாசத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் புறக்கோட்டை கிளையில் பொதுமக்கள் நாணய மற்றும் கருமபீடமொன்று இயங்குகின்றது. இலங்கை மத்திய வங்கியின் சார்பில் இயங்குகின்ற இவ் இலங்கை வங்கிக் கிளையில் திங்கள் முதல் வெள்ளி வரை வேலைநாட்களில் நாணயத்தாள்களையும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மு.ப 9.00 மணி தொடக்கம் நாணயக்குத்திகளையும் பொதுமக்கள் மாற்றமுடியும்.