பங்கு/ பங்குரிமை மூலதனச் சந்தை

பங்குகள் என்பது கம்பனியின் சொத்துடமையின் ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிணையங்களாகும். அவை கம்பனியின் வருவாய்கள் மற்றும் சொத்துக்களின் கோரல்களுமாகும்.

பங்குடமையாளர்களுக்கு கம்பனியின் இலாபங்களின் சதவீதமாக பங்கிலாபங்கள் செலுத்தப்படுகின்றன.

இலங்கையில் பங்குச் சந்தைத் தொழிற்பாடுகள் பிரித்தானிய காலணித்துவ காலப்பகுதியில் 1896இல் கொழும்பு பங்குத்தரகர் சங்கம் உருவாக்கப்பட்டமையுடன் ஆரம்பித்ததுடன் 1990இல் இது கொழும்பு பங்குப் பரிவர்த்தனை என மீளப் பெயரிடப்பட்டது.

பங்குரிமை மூலதனச் சந்தைத் தொழிற்பாடுகள், மற்றைய பெரும்பாலான சந்தைகளைப் போன்றே நாட்டின் அரசியல் மற்றும் சமாதான சூழ்நிலை மாற்றங்களுக்கேற்ப உயர்ந்த உணர்திறனைக் கொண்டனவாகக் காணப்படுகின்றன. மேலும், சந்தையின் செயலாற்றமானது சந்தையின் முக்கிய தொழிற்பாட்டாளர்களின் ஆற்றல் வாய்ந்த அடிப்படைகள் மற்றும் இலாபத்தன்மை என்பனவற்றுடன் மிக நெருக்கமாகத் தொடர்புபட்டிருக்கிறது. முதலீடுகள் மற்றும் கடன்வழங்கல் நடவடிக்கைகளினூடாக பங்குரிமை மூலதனச் சந்தையில் நிதியியல் நிறுவனங்களின் வெளிப்படுத்துகை குறைவாக இருப்பதனால் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டில் பங்குரிமை மூலதனச் சந்தைத் தொழிற்பாடுகளின் தாக்கம் ஒப்பீட்டு ரீதியில் குறைவாகவுள்ளது.