மத்திய வங்கியின் நிலைபெறத்தக்க நிதியிடல் செயற்பாடுகள்

காலநிலை மாற்றத்தைத் தணித்தல் மற்றும் ஏற்றதாகிக்கொள்ளுதல் என்பன உள்ளடங்கலாக வளர்ந்துவரும் சந்தைகளில் சுற்றாடல், சமூக மற்றும் ஆளுகை இடர்நேர்வு முகாமைத்துவம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அர்பணித்துள்ள 66 நாடுகளைச் சேர்ந்த மத்திய வங்கிகள், வங்கித்தொழில் ஒழுங்குமுறைப்படுத்துநர்கள் அத்துடன் வங்கித்தொழில் அமைப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கி பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தினால் துணையளிக்கப்பட்ட நிலைபெறத்தக்க வங்கித்தொழில் நிதி வலையமைப்புடன் இலங்கை மத்திய வங்கி 2016இல் இணைந்துகொண்டுள்ளது. நிலைபெறத்தக்க வங்கித்தொழில் மற்றும் நிதி வலையமைப்பு உறுப்பு நிறுவனம் என்ற வகையில் இலங்கை மத்திய வங்கி பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் தொழில்நுட்ப உதவியுடனும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் நிதிசார் உதவியுடனும் இலங்கையில் நிலைபெறத்தக்க நிதிக்கான வழிகாட்டலை 2019இல் தொடங்கி வைத்தது. 

நிலைபெறத்;தக்க நிதி வழிகாட்டலை நடைமுறைப்படுத்துவதற்காக இரு உள்ளகக் குழுகள் அதாவது, வழிநாடாத்தல் குழுவும் தொழில்நுட்பக் குழுவும் தாபிக்கப்பட்ட அதேவேளை வழிகாட்டலின் நடைமுறைப்படுத்தல் பற்றிய முன்னேற்றத்தினை கலந்துரையாடுவதற்கு நிதியியல் துறை பங்குதாரர்களை உள்ளடக்குகின்ற ஆர்வலர் குழுவொன்று கிரமமாகச் சந்திக்கின்றது.

2022இல், சுற்றாடல் ரீதியான நிலைபெறத்தக்கதாகக் கருதப்படக்கூடிய பொருளாதார நடவடிக்கைகளை இனங்காண்பதற்கான வகைப்படுத்தல் முறைமையொன்றான இலங்கை பசுமை நிதி வகைப்படுத்தலை மத்திய வங்கி வெளியிட்டது. தொழில்நுட்பத் துறை தொடக்கம் அறிஞசர்கள் வரை பல்துறை ஆர்வலர்களின் ஈடுபாட்டுடன் வகைப்படுத்தலை உருவாக்குவதற்கு பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தினால் தொழில்நுட்ப ரீதியாகவும் நிதியியல் ரீதியாகவும் உதவியளிக்கப்பட்டது. 

நிலைபெறத்தக்க நிதி வழிகாட்டலுக்கமைவாக மத்திய வங்கி, நிலைபெறத்தக்க நிதியிடல் செயற்பாடுகளை அறிக்கையிடுவதற்காக உரிமம்பெற்ற வங்கிகளுக்கான பணிப்புரையொன்றினை வழங்கியதுடன் மத்திய வங்கியினால் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்ற வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களுக்காக இதனையொத்த வழிகாட்டலொன்று வழங்கப்பட்டது.

2023இல், நிலைபெறத்தக்க முதலீடுகளில் முதலிடப்பட்ட தனியார் மூலதனத்தின் அளவினை அதிகரிக்கின்ற ஒட்டுமொத்த நோக்குடன் கொள்கை வகுப்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடலுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தினால் தாபிக்கப்பட்ட மன்றமொன்றான நிலைபெறத்தக்க நிதிக்கான பன்னாட்டு தளத்தின் 20ஆவது உறுப்பு நாடாக இலங்கை உருவானது.

இலங்கையில் நிலைபெறத்தக்க நிதி வழிகாட்டலை நடைமுறைப்படுத்துவதற்கான செயலகமாக மத்திய வங்கியின் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களம் செயற்படுகின்றது. இது நிலைபெறத்தக்க நிதியிடல் பற்றிய நிதியியல் துறையின் இயலளவினைக் கட்டியெழுப்புவதிலும் நாட்டில் நிலைபெறத்த நிதியிடலைப் பிரபல்யப்படுத்துவதற்காக பன்னாட்டு முகவராண்மைகள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் ஒருங்கிணைப்பதிலும் ஈடுபட்டுள்ளது.  விசேடமாக வகைப்படுத்தலைக் கடைப்பிடிக்கின்ற நிதியியல் நிறுவனங்களினால் எழுப்பப்படும் பசுமை நிதி வகைப்படுத்தலுடன் தொடர்புடைய வினவல்களுக்கு பதிலளிப்பதற்கு வெளிவாரி நிபுணர்களைக் கொண்ட குழாமொன்றினையும் மத்திய வங்கி உருவாக்கியுள்ளது.

 

இணைப்புகள்

நிலைபெறத்தக்க நிதி வழிகாட்டல்

இலங்கை பசுமை நிதி வகைப்படுத்தல்

வகைப்படுத்தல் பின்னணி அறிக்கை

வங்கித்தொழில் துறை பணிப்புரை 

நிலைபெறத்தக்க வங்கித்தொழில் நிதி வலையமைப்பு துறை வழிகாட்டல்

பசுமை நிதிச் செயற்பாடுகள் பற்றிய தகவல்குறிப்பேடு