திணைக்களங்கள்

இலங்கை மத்திய வங்கியின் சுமுகமான தொழிற்பாட்டுக்காக, வங்கியின் திணைக்களங்கள் பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாடு; நிதியியல் முறைமையின் உறுதிப்பாடு, நாணய வெளியீடும் முகாமைத்துவமும் மற்றும் அரசுக்கான முகவர் பணிகள் என்கின்ற நான்கு பிரதான தொழிற்பாட்டுப்; பிரிவுகளாகவும்; மனிதவள அபிவிருத்தியும் முகாமைத்துவமும், நிருவாகப்பணிகள் மற்றும் கொள்கை மீளாய்வும்; கண்காணிப்பும் என்கின்ற மூன்று உதவிப் பணி பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. திணைக்களங்கள் பணிப்பாளர்களினால் (அல்லது அதற்கு சமனான) தலைமை தாங்கப்படுகின்றன. இவை உதவி ஆளுநரூடாக ஆளுநருக்கு அல்லது துணை ஆளுநர்களுக்கு (வேலை தொடர்பாக) அறிவிக்கின்றன. இதேவேளை, உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களம் ஆளுநருக்கும், நாணயச் சபைக்கும் நேரடியாக அறிவிக்கின்றது.

ஒரு துணை ஆளுநர் பொருளாதார மற்றும் விலை உறுதிப்பாட்டுக் குழுவுக்கு பொறுப்பாக இருக்கிறார். மற்றவர், நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டுக் குழுவுக்கு பொறுப்பாகவுள்ளார். நாணய வெளியீடும் முகாமைத்துவமும், மற்றும் முகவர் பணிகள் குழுக்களின் கீழ் வரும் திணைக்களங்கள் இரு துணை ஆளுநர்களில் ஒருவருக்கும், மூன்று உதவிப் பணிக் குழுவின் கீழ் வரும் எல்லாத் திணைக்களங்களும் தொடர்புடைய தங்கள் உதவி ஆளுநர்கள் ஊடாக ஆளுநருக்கும் அறிவிக்கின்றன.

பொருளாதாரம் மற்றும் விலை உறுதிப்பாட்டுக் கொத்தணி

உள்நாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களம்

நாணயக் கொள்கை வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் அரசாங்கம், வர்த்தக வங்கிகள் மற்றும் முதனிலை வணிகர்களுக்கான நடைமுறைக் கணக்கு வசதிகளைத் தொழிற்படுத்தவும் பொறுப்பாக இருக்கின்றது.

பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களம்

தரவுகளைத் திரட்டுவதற்கும் கொள்கைகளையும் வழிமுறைகளையும் வடிவமைப்பதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் பணம், வங்கித்தொழில் மற்றும் ஏனைய பொருளாதார விடயங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கும் பொதுமக்களுக்கான தகவல்களுக்கும் பொறுப்பாக இருப்பதுடன் அரசாங்கத்திற்கு பொருளாதார மதியுரை வழங்குவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

பன்னாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களம்

சமூக பொருளாதாரப் புள்ளிவிபரங்களைத் திரட்டுதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் எதிர்வுகூறுதல் மற்றும் அளவீடுகளை நடத்துதல் என்பனவற்றிற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

புள்ளிவிபரவியல் திணைக்களம்

சமூக பொருளாதாரப் புள்ளிவிபரங்களைத் திரட்டுதல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் எதிர்வுகூறுதல் மற்றும் அளவீடுகளை நடத்துதல் என்பனவற்றிற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

தொடர்பூட்டல் திணைக்களம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தொடர்பூட்டல் பணிகளை வழங்குவதற்கும், நூல்நிலையப் பணிகள், அச்சிடல் பணிகளை மேற்கொள்ளவும் மற்றும் பொருளாதார வரலாற்று அரும்பொருட்காட்சிச்சாலையை முகாமைப்படுத்துவதற்கும் பொறுப்பாக இருக்கின்றது.

 

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் கொத்தணி

வங்கி மேற்பார்வைத் திணைக்களம்

உரிமம் பெற்ற வங்கிகளின் ஒழுங்குமுறைப்படுத்தலுக்கும் மேற்பார்வைக்கும் இலங்கை வைப்புக் காப்புறுதித் திட்டத்தினை நிருவகிப்பதற்கும் பொறுப்பாக இருக்கின்றது.

நாணயத் திணைக்களம்

தேசிய நாணயக் குத்திகளையும் நாணயத் தாள்களையும் வெளியிடுவதற்கும் பகிர்ந்தளிப்பதற்கும் பொறுப்பாக இருக்கின்றது.

பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களம்

பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பினூடாக நிதியியல் துறையினைக் கண்காணிப்பதற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள் திணைக்களம்

லங்கா செட்டில் முறைமையின் தொழிற்பாடுகள், கொடுப்பனவுப் பணிகள் மற்றும் சாதனங்களை ஒழுங்குமுறைப்படுத்தல், உள்நாட்டு கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளின் மேற்பார்வை என்பனவற்றிற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம்

உரிமம் பெற்ற நிதி மற்றும் குத்தகைக் கம்பனிகளின் சட்டவிதிகளின் ஒழுங்குமுறைப்படுத்தல், மேற்பார்வை என்பனவற்றிற்கு பொறுப்பாகவுள்ளது.

 

முகவர் பணிகள் கொத்தணி

ஊழியர் சேம நிதியத் திணைக்களம்

உறுப்பினர் பங்களிப்புக்களைப் பெறுதல், உறுப்பினர் கணக்குளைப் பேணுதல், நிதிகளை முதலீடு செய்தல் மற்றும் ஊ.சே. நிதிய உறுப்பினர்களுக்கு நன்மைகளைச் செலுத்துதல் என்பவற்றிற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

செலாவணிக் கட்டுப்பாட்டுத் திணைக்களம்

செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் வெளிநாட்டுச் செலாவணி முகாமைத்துவத்திற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

நிதியியல் உளவறிதல் பிரிவு

பணம் தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடல் தொடர்பான நிதியியல் கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடல் சட்டத்தின் நடைமுறைப்படுத்தல் மற்றும் நிருவாகத்திற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

பொதுப்படுகடன் திணைக்களம்

பொதுப்படுகடனைத் திரட்டல், தீர்ப்பனவு செய்தல் மற்றும் முகாமைப்படுத்தல், அரச பிணையங்களுக்கான மத்திய வைப்பக முறையைப் பேணுதல் மற்றும் முதனிலை வணிகர்களை மேற்பார்வை செய்தல் என்பனவற்றிற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

பிரதேச அபிவிருத்தித் திணைக்களம்

பங்கேற்கும் நிதியியல் நிறுவனங்கள் மற்றும் கொடையாளர்களால் உதவப்பட்ட கொடுகடன் வழங்கல் நிகழ்ச்சித்திட்டங்கள் என்பனவற்றினூடாக அரசாங்கத்தின் சார்பில் பிரதேச அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கும் பொறுப்பாக இருக்கின்றது.

 

கம்பனிப் பணிகள் கொத்தணி

வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வுநிலையம்

மத்திய வங்கி அலுவலர்களுக்கும் நிதியியல் துறை ஆளணியினர்களுக்கும் உள்ளகப் பயிற்சிகளை வழங்குவதற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

தொடர்பூட்டல் திணைக்களம்

வங்கியின் கொள்கைகள், வெளியீடுகள் என்பனவற்றின் தொடர்பூட்டல்கள் மற்றும் அத்தகைய தகவல்களைப் பொதுமக்களுக்கும், மத்திய வங்கி அலுவலர்களுக்கும் பரப்புவதோடு, நூல் நிலைய வசதிகளை அளிப்பதற்கும் பொறுப்பாகவுள்ளது

வசதிகள் முகாமைத்துவத் திணைக்களம்

இலங்கை மத்திய வங்கியின் பணிமனைகள் மற்றும் பௌதீகச் சொத்துக்களைப் பேணுவதற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

நிதித் திணைக்களம்

மத்திய வங்கியின் வரவு செலவுத்திட்டமிடல், வரவு செலவுத்திட்டக் கட்டுப்பாடு மற்றும் நிதியியல் கூற்றுக்கள்/ அறிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்கின்றது.

ஆளுநர் செயலகம்

ஆட்சேர்ப்பு, பதவியமர்த்தல், பயிற்சி, பதவி உயர்விற்கும் அலுவலர்களின் செயலாற்றத்தினைக் கண்காணிப்பதற்கும் பொறுப்பாக இருக்கின்றது.

மனித வளங்கள் திணைக்களம்

ஆட்சேர்ப்பு, பதவியமர்த்தல், பயிற்சி, பதவி உயர்விற்கும் அலுவலர்களின் செயலாற்றத்தினைக் கண்காணிப்பதற்கும் பொறுப்பாக இருக்கின்றது.

தகவல் தொழில்நுட்பவியல் திணைக்களம்

இலங்கை மத்திய வங்கியின் தகவல் தொழில்நுட்பத் தொழிற்பாடுகளையும் முறைமைகளையும் வழங்குவதற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களம்

உள்ளகக் கணக்காய்வுத் தொழிற்பாடுகளுக்குப் பொறுப்பாக இருக்கின்றது.

சட்டம் மற்றும் இணங்குவிப்புத் திணைக்களம்

அனைத்துச் சட்ட ரீதியான மற்றும் நடவடிக்கை முறை விடயங்களில் மத்திய வங்கியின் ஒருங்கிணைப்பினை உறுதிப்படுத்துவதற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

கொள்கை மீளாய்வு மற்றும் கண்காணிப்புத் திணைக்களம் 

இலங்கை மத்திய வங்கியின் உபாயத் திட்டங்களைக் கண்காணித்து நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

இடர்நேர்வு முகாமைத்துவத் திணைக்களம்

இலங்கை மத்திய வங்கியில் இயல்பாகக் காணக்கூடிய இடர்நேர்வுகளை அடையாளம் காணுதல், மதிப்பிடல் மற்றும் கட்டுப்படுத்துதலினூடாக வங்கியின் நம்பிக்கைத்தன்மையினையும் புகழையும் பேணும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் இடர்நேர்வுகளை முகாமைத்துவம் செய்வதற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

செயலகத் திணைக்களம்

இலங்கை மத்திய வங்கியின் பொதுவான நிருவாகத்திற்கும் பணிகளின் கொள்வனவுகளுக்கும் பொறுப்பாக இருக்கின்றது.

பாதுகாப்புப் பணிகள் திணைக்களம்

வங்கிக்கு பாதுகாப்பு வழங்குவதற்குப் பொறுப்பாகவுள்ளது

அலுவலர் பணிகள் முகாமைத்துவத் திணைக்களம்

இலங்கை மத்திய வங்கி அலுவலர்களுக்கு நலன்புரி வசதிகளை வழங்குவதற்குப் பொறுப்பாக இருக்கின்றது.

பயிற்சி மற்றும் அபிவிருத்தித் திணைக்களம்

பயிற்சி மற்றும் அபிவிருத்தியூடாக இலங்கை மத்திய வங்கி அலுவலர்களின் போட்டித்தன்மை, செயலாற்றம் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு இது பொறுப்பாக இருக்கின்றது.