பொதுமக்கள் நாணயமாற்றுக் கருமபீடம்

212/63, கேஸ் வேர்க்ஸ் வீதி,கொழும்பு 11 என்ற விலாசத்தில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் புறக்கோட்டை கிளையில் பொதுமக்கள் நாணயமாற்றுக் கருமபீடமொன்று இயங்குகின்றது. இலங்கை மத்திய வங்கியின் சார்பில் இயங்குகின்ற இவ் இலங்கை வங்கிக் கிளையில் திங்கள் முதல் வெள்ளி வரை வேலைநாட்களில் நாணயத்தாள்களையும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மு.ப 9.00 மணி தொடக்கம் (பொது மற்றும் வங்கி விடுமுறை நாட்கள் தவிர) நாணயக்குத்திகளையும் பொதுமக்கள் மாற்றமுடியும்.

தொலைபேசி இல: 0112434478