Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்திற்கான திருத்தங்கள் மீதான பகிரங்க ஆலோசனை

நிதிக் கம்பனிகளின் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வையினை வலுப்படுத்தல், அதிகாரமளிக்கப்படாத நிதித்தொழில்களை விசாரித்தல் மற்றும் வழக்குத்தொடுத்தல், ஒப்பேறாத நிதிக் கம்பனிகளை தீர்த்துவைத்தல் மற்றும் ஒடுக்குதல் என்பவற்றுக்கான தேவைகளை அங்கீகரித்து இலங்கை மத்திய வங்கி நிதித்தொழில் சட்டத்திற்குத் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. 

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் 2025 ஒத்தோபரில் எதிர்பார்க்கப்பட்டவாறு இலக்கினை நோக்கி மேலும் அதிகரித்தது

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100)  அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), 2025 ஒத்தோபரில் மேலும் அதிகரித்து, பணவீக்க இலக்கினை நோக்கி தொடர்ந்தும் முன்னேற்றமடைவதைக் காண்பிக்கின்றது. அதற்கமைய, முதன்மைப் பணவீக்கமானது இலங்கை மத்திய வங்கியின் அண்மைய கால எறிவுகளுக்கு இசைவாக, (ஆண்டிற்கு ஆண்டு) 2025 செத்தெம்பரின் 1.5 சதவீதத்திலிருந்து 2025 ஒத்தோபரில் 2.1 சதவீதத்திற்கு அதிகரித்தது.  

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – கட்டடவாக்கம் 2025 செத்தெம்பரில் அதிகரித்தது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்)இ மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 செத்தெம்பரில் 67.6 இனை அடைந்து 2021இ;ன் பிந்திய பகுதி தொடக்கம் அவதானிக்கப்பட்ட நடடிவக்கையில் வலுவான அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. தொடர்ச்சியாக கருத்திட்ட வாய்ப்புக்கள் கிடைக்கப்பெறுகின்றமை கட்டடவாக்கத்துறையில் வளர்ச்சிக்கு உறுதியாக துணையளித்துள்ளது என பதிலிறுப்பாளர்கள் எடுத்துக்காட்டினர்.

வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2025 செத்தெம்பர்

இலங்கையின் வெளிநாட்டுத் துறையானது 2025 சனவரி தொடக்கம் ஓகத்து வரையான காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட தொடர்ச்சியான மாதாந்த நடைமுறைக் கணக்கு மிகைகளைத் தொடர்ந்து, 2025 செத்தெம்பரில் மாதாந்த நடைமுறைக் கணக்கு பற்றாக்குறையொன்றைப் பதிவுசெய்தது. எனினும், முதல் ஒன்பது மாதங்களுக்கான ஒன்றுசேர்ந்த நடைமுறைக்கு கணக்கு மிகை ஐ.அ.டொலர் 1.9 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. 

வாகன இறக்குமதிகளின் மிதமிஞ்சிய அதிகரிப்பினால் பிரதானமாகத் தூண்டப்பட்டு இறக்குமதிச் செலவினம் ஐ.அ.டொலர் 2 பில்லியனை விஞ்சியமையினால், வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 செத்தெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு விரிவாக்கமொன்றைப் பதிவுசெய்தது. 

இலங்கை மத்திய வங்கிக்கு புதிய துணை ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கிணங்க ஆளும் சபையினால் பரிந்துரைக்கப்பட்டவாறு,  உதவி ஆளுநரான முனைவர் சி. அமரசேகர மற்றும் உதவி ஆளுநரான திரு. கே. ஜி. பி. சிறிகுமார ஆகியோரை முறையே 2025.10.24 மற்றும் 2025.11.03 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்களாக கௌரவ நிதி அமைச்சர் நியமித்துள்ளார்.

2025 உலக வங்கிக் குழுமம்/ பன்னாட்டு நாணய நிதிய வருடாந்த கூட்டத்தில் இலங்கையின் பேராளர் குழு உயர் மட்ட சந்திப்புக்களில் ஈடுபட்டது குளோபல் பினான்ஸ் சஞ்சிகை மூலம் ஆளுநருக்கு “ஏ தர” கௌரவமளிக்கப்பட்டது

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் நந்தலால் வீரசிங்க தலைமையிலான இலங்கையின் பேராளர்குழு 2025 ஒத்தோபர் 13 – 18 காலப்பகுதியின் போது வோசிங்டன் டி.சி இல் 2025 உலக வங்கிக் குழுமம்/ பன்னாட்டு நாணய நிதிய வருடாந்த கூட்டத்தின் போது தொடரான உயர்மட்ட இருதரப்பு மற்றும் பல்தரப்புச் சந்திப்புக்களில் முனைப்புடன் பங்கேற்றது.

Pages

சந்தை அறிவிப்புகள்