இலங்கை மத்திய வங்கியின் விழிப்புணர்வு

இலங்கை மத்திய வங்கியின் விழிப்புணர்வு, இலங்கை மத்திய வங்கியின் குறிக்கோள் மற்றும் தொழிற்பாடுகள் மீதான புரிந்துகொள்ளலை அதிகரித்துக்கொள்ளவும்; உங்களின் நிகழ்வுகளுக்காக பேச்சாளர்களை ஏற்பாடுசெய்துகொள்ளல், குறிப்பிட்ட மகுடங்களின் மீது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை நடத்துதல், நாணய அரும்பொருட்காட்சிசாலைக்கு வழிகாட்டலுடன்கூடிய சுற்றுலாக்களை ஒழுங்குசெய்தல், பதிவிறக்கம் செய்யக்கூடிய வகுப்பறைப் பொருட்களை வழங்குதல், மற்றும் பொருளாதாரம் மற்றும் நிதி, காலத்திற்குக் காலம் கல்விசார் நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகளை வழங்குதல் உட்பட, பல்தரப்பட்ட பணிகளினூடாக இதன் கொள்கைத் தீர்மானங்களுக்கு கூடுதலான தெளிவான தன்மையினை வழங்கவும் கடுமையாக முயற்சிக்கிறது.

இப்பணிகளை கீழே கண்டு கொள்ளக்கூடிய விதத்தில் எவ்வாறு அணுகுவது என்பது பற்றிய மேலதிக தகவல்கள்:

உங்கள் நிறுவனத்திற்கான பேச்சாளரொருவருக்கான கோரிக்கை

இலங்கை மத்திய வங்கியின் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் உங்களது நிகழ்வுகள் மற்றும் கல்விசார் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு வள ஆளணியினராக பணியாற்றுவதற்கு தன்னார்வ அடிப்படையில் விரும்பம் கொண்டுள்ள தொழில்நுட்ப ரீதியாக தகைமைபெற்ற குழுவினரால் வரையப்படுகின்றன. தயவுசெய்து உங்கள் கோரிக்கைகளை உங்கள் நிகழ்வுகள்/ கல்விசார் நிகழ்ச்சிகளை விபரங்களுடன் awareness@cbsl.lk இற்கு அனுப்பி வைக்கவும்.

மத்திய வங்கியில் தெரிவுசெய்யப்பட்ட மகுடங்களின் மீதான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களுக்கான கோரிக்கை

இலங்கை மத்திய வங்கியின் விழிப்புணர்வு, பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள், ஆய்வரங்குகள் மற்றும் ஏனைய கல்விசார் நிகழ்ச்சித்திட்டங்களை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், கல்விசார் அலுவலகங்கள், வங்கிகள், பாதுகாப்புப் பணிகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்காக இலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்திலும் பிரதேச அலுவலகங்களிலும் ஒழுங்குசெய்கிறது.

நீங்கள் இணையவழி விண்ணப்பப்படிவத்தினை தேவையான விபரங்களுடன் நிரப்பி உங்கள் கோரிக்கையினை awareness@cbsl.lk இற்கு அனுப்பி வைக்கவும். 

   

வழிகாட்டலுடன்கூடிய நாணய அரும்பொருட்காட்சிசாலையின் சுற்றுலாவிற்கான கோரிக்கை

இலங்கை மத்திய வங்கியின் நாணய அரும்பொருட்காட்சிசாலை, உலகின் நாணய வகைகளின் பரிணாம வளர்ச்சியை பரந்தளவான வீச்சில் எடுத்துக்காட்டுவதுடன் இதன்மூலமாக, கி.மு 3ஆம் நூற்றாண்டிற்கு அப்பாலிருந்து இன்று வரை இலங்கையில் பயன்படுத்தப்பட்டுவரும் நாணயத் தாள்களையும் குற்றிகளையும் காட்சிப்படுத்துகிறது. நாணய அரும்பொருட்காட்சிசாலை தொடர்பான கூடுதலான தகவல்களுக்கு இங்கே அழுத்தவும். 

நாணய அரும்பொரும்காட்சிசாலை பற்றிய வழிகாட்டலுடன்கூடிய சுற்றுலாவிற்கான நேரத்தினை ஒதுக்கிக் கொள்வதற்கு தயவுசெய்து தேவையான தகவல்களுடன் நேர ஒதுக்கீட்டிற்கான விபரங்களுக்கான உங்கள் கோரிக்கையினையும் awareness@cbsl.lk இற்கு அனுப்பி வைக்கவும்.

விழிப்புணர்விற்கான மூலவளங்கள்

இலங்கை மத்திய வங்கியின் விழிப்புணர்வு கல்விசார் பாடவிதானங்களுக்கு ஆதரவளிப்பதற்கான வீடியோ தொடர்களை உருவாக்கியிருக்கிறது. எமது இலவச வகுப்பறைப் பொருட்களை கண்டறிந்துகொள்வதற்கு கீழேயுள்ள இணைப்பினை அழுத்தவும்: 

மத்திய வங்கித்தொழில்

நாணயக் கொள்கை

நிதியியல் அறிவு

   

இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகளைக் கொள்வனவு செய்தல்

இலங்கை மத்திய வங்கியின் வெளியீடுகள் பொருளாதாரம், மத்திய வங்கித்தொழில் பற்றிய உங்கள் புரிதல்களை அதிகரித்துக்கொள்வதற்காக பொருளாதாரம் மற்றும் நிதி பற்றிய கிரமமான தொடர்களாகவும் ஒரே முறையிலமைந்த வெளியீடுகளாகவும் வெளியிடப்படுகின்றன. இதனை இலங்கை மத்திய வங்கியின் வெப்தளமூடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். 

வெளியீடுகளுக்கான இணைப்புக்கள்:

பொருளாதார மற்றும் நிதியியல் அறிக்கைகள் 

காலாந்தர வெளியீடுகள்

ஏனைய வெளியீடுகள்

இவற்றுள் எவற்றையேனும் நீங்கள் கொள்வனவு செய்ய விரும்பின் இலங்கை மத்திய வங்கியின் விற்பனைப் பீடத்திற்கு தயவுசெய்து விஜயம் செய்யவும். 

கல்விசார்ந்த நிகழ்வுகள்

ஈகோன் - ஐகோன் வினாடிவினா நிகழ்ச்சிகள்

'ஈகோன் - ஐகோன்' என்பது கல்விசார் தொலைக்காட்சி வினாடிவினா நிகழச்சிகளாக இருப்பதுடன் இவை உயர்தர மாணவர்களின் பொருளாதார மற்றும் மத்திய வங்கி தொடர்பில் அறிவினை உயர்த்துவதற்காக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகள் இரண்டிலும் இடம்பெறுகிறது. 

ஈகோன் - ஐகோன் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்

தக்ஷிலாவ மற்றும் அறிவூற்று

இது கல்விசார்ந்த, அறிவினை பகர்ந்துகொள்கின்ற நிகழ்ச்சித்திட்டமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களை இலக்காகக் கொண்டு இலங்கை மத்திய வங்கியின் தொழில்நுட்ப ரீதியாக தகைமைபெற்ற வள ஆளணியினரால் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் வழங்கப்படுகிறது.

தகஷிலாவ (சிங்களம்) அறிவூற்று (தமிழ்) நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு இங்கே அழுத்தவும்.