நிதியியல் வசதிக்குட்படுத்தல்
நிதியியல் வசதிக்குட்படுத்தல் - சமூகத்தின் அனைத்து வகுப்பினர்களும் தரமான, வசதியான மற்றும் பொருத்தமான நிதியியல் சாதனங்களை மற்றும் பணிகளை அணுகவும் பயன்படுத்தக்கூடியதாகவும் இருப்பதனை உறுதிசெய்வது அனைவரையும் உள்ளடக்குகின்ற மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை முக்கியமாக இயலுமைப்படுத்துமொன்றாகும். நிதியியல் வசதிக்குட்படுத்தலை ஊக்குவிப்பது 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க் இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் நியதிச்சட்டப் பொறுப்பொன்றாக நிதியியல் வசதிக்குட்படுதலை ஊக்குவித்தலை தெளிவுபடுத்துவதன் மூலம் நிதியியல் வசதிக்குட்படுத்துவதனை முன்னேற்றும் கொள்கைகளை வடிவமைத்து நடைமுறைப்படுத்துகின்றமையின் மீது உபாயம் மிக்க கவனத்தினை மேலும் வலுப்படுத்துகிறது.
இலங்கை மத்திய வங்கியின் நிதியியல் வசதிக்குட்படுத்தல் திணைக்களம் பல்வேறுபட்ட தேசிய மட்ட ஆர்வலர்களின் நெருங்கிய ஒத்துழைப்புடன் இப்பொறுப்பாணையினை தொழிற்படுத்துகின்றது. இப்பின்னணியில் 2021 – 2024 இற்கான இலங்கையின் முதலாவது தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயமானது “சிறந்த வாழ்க்கைக்கான சிறந்த தரமான நிதியியல் வசதிக்குட்படுத்தல்” என்ற பகிரப்பட்ட தொலைநோக்கின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டலின் மூலம் பல்வேறு ஆர்வலர்களின் முன்னெடுப்பாக தொடங்கிவைக்கப்பட்டது.
காத்திரமான நடைமுறைப்படுத்தலுக்கு ஆதரவளிப்பதற்காக தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயச் செயலகம் 2021இல் நிதியியல் வசதிக்குட்படுத்தல் திணைக்களத்தில் நிறுவப்பட்டதுடன் மத்திய இணைப்பு மற்றும் தொழில்நுட்ப சபையாக தொழிற்பட்டு தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாய ஆளுகைக் கட்டமைப்பிற்கு ஆதரவளிப்பதுடன் அரசாங்க அமைச்சுக்கள், நிதியியல் துறை ஒழுங்குமுறைப்படுத்துனர்கள், நிதியியல் நிறுவனங்கள், அபிவிருத்திப் பங்காளர்கள் மற்றும் தனியார் துறை ஆர்வலர்களிடையேயான ஒத்துழைப்பிற்கும் வசதியளிக்கின்றது.
தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயமானது:
(i) டிஜிட்டல் நிதி மற்றும் கொடுப்பனவுகள் ,
(ii) நுண்பாக, சிறிய நடுத்தர தொழில்முயற்சி நிதி,
(iii) வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும்
(iv) நிதியியல் அறிவு மற்றும் இயலாற்றலைக் கட்டியெழுப்பல்.
ஆகிய நான்கு முக்கிய கவனத்திற்குரிய துறைகளிடையேயான முன்னேற்றத்திற்கு முன்னுரிமையளிக்கிறது. இக்கவனத்திற்குரிய துறைகள் தரவு, உட்கட்டமைப்பு மற்றும் கொள்கை ஒழுங்குவிதிகள் மற்றும் மேற்பார்வை ஆகிய மிக முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப மற்றும் சிறப்பியல்புவாய்ந்த அறிவினைக் கொண்ட இயலுமைப்படுத்தும் காரணிகளினால் ஆதரவளிக்கப்படுகின்றது.
நிதியியல் வசதிக்குட்படுத்தல் திணைக்களம், குறைபாடுகளை அடையாளம் காண்பதற்காக தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் தோற்றவமைபினை தொடர்ச்சியாக மீளாய்வு செய்துவருவதுடன் கொள்கைகளை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும் நிதியியல் வசதிக்குட்படுத்தலில் காணப்படக்கூடிய தடைகளை நீக்கி முன்னெடுப்புக்களை மேற்கொள்ளவும் முக்கியமான ஆர்வலர்களுடன் தொடர்ந்தும் பணியாற்றிவருகின்றது.
நிதியியல் வசதிக்குட்படுத்தலின் முக்கிய தூணொன்றாக நிதியியல் அறிவினை அங்கீகரித்து, இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்ளின் ஆதரவுடன் நாடு தழுவிய முறையில் நிதியியல் இயலாற்றலை வலுப்படுத்தும் பொருட்டு, மத்திய வங்கி இலங்கை நிதியியல் அறிவு வழிகாட்டலொன்றினை தயாரித்து அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டம் இயற்றப்பட்டதுடன், மத்திய வங்கியினால் நிதியிடப்பட்ட மீள் நிதியிடல் திட்டங்கள் நிறுத்தப்பட்டதுடன் ஆளுகைச் சபையின் கொள்கைத் தீர்மானங்களைத் தொடர்ந்து அரசாங்கத்தினாலும் நன்கொடை முகவர்களினாலும் நிதியிடப்பட்ட சலுகை அடிப்படையிலான கொடுகடன் தொழிற்பாடுகள் திறைசேரிக்கு மாற்றல் செய்யப்பட்டிருக்கின்றன அல்லது படிப்படியாக அகற்றப்பட்டு வருகின்றன. இதன்படி மூன்று கடன் திட்டங்கள் மாத்திரம் இன்னமும் தொழிற்பட்டு வருவதுடன் அவை இயல்பாகவே நிறைவடையும் வரை தொடரும்.
நிதியியல் வசதிக்குட்படுத்தலுடன் தொடர்பான முக்கிய ஆவணங்கள்
திகதி |
ஆவணத்தின் பெயர் |
|
மாச்சு 2021 |
இலங்கைக்கான தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயம் (2021 – 2024) |
|
ஒத்தோபர் 2022 |
|
|
மே 2024 |
|
|
யூலை 2025 |








