முதனிலை வணிகர்கள்

அரச பிணையங்களிலுள்ள முதனிலை வணிகர்களுக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைக் கட்டமைப்பு, உள்நாட்டுத் திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் மற்றும் பதிவுசெய்யப்பட்ட பங்குகள் பிணையங்கள் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் விடுக்கப்பட்ட ஒழுங்குவிதிகளினால் குறித்துரைக்கப்பட்டிருக்கிறது. 2016.06.03 இலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் முதனிலை வணிகர்களின் மேற்பார்வைக்கு வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம் பொறுப்பாக இருக்கிறது.

முதனிலை வணிகர்களாக தொழிற்படுவதற்கு அதிகாரமளிக்கப்படுவதற்கு இரண்டு வகையான நிறுவனங்கள் தகுதியுடையனவாகும்.

1. உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள்

2. பிரத்தியேக முதனிலை வணிகர் கம்பனிகள்

அரச பிணையங்கள் சந்தையின் உறுதிப்பாட்டினை மேம்படுத்துவதற்கும் முதலீட்டாளர்களின் நலவுரித்துக்களைப் பாதுகாப்பதற்காகவும் முதனிலை வணிகர் முறைமையின் வினைத்திறன், ஆற்றல் வாய்ந்த தன்மை மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் என்பனவற்றிற்காக முதனிலை வணிகர்களின் மேற்பார்வை மேற்கொள்ளப்படுகிறது.

முதனிலை வணிகர்களை ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பார்வை செய்யும் அதிகாரம் மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது அதிகாரமளிக்கப்பட்ட முதனிலை வணிகர்களை நியமித்தல்,  சட்டத்தின் கீழ் முன்மதியுடைய பணிப்புரைகளையும் தீர்மானங்களையும் விடுத்தல், முதனிலை வணிகர்களைப் பரீட்சித்தல் மற்றும் தொடர்ச்சியாக கண்காணித்தல், ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் சட்டத்திற்கிணங்கி நடக்காத முதனிலை வணிகர்களின் நியமனங்களை இடைநிறுத்துதல் மற்றும் இரத்துச்செய்தல் போன்றவற்றை பாராதீனப்படுத்துகிறது.

முதனிலை வணிகர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கியமான ஒழுங்குவிதிகளும் பணிப்புரைகளும் முக்கியமாக கொடுக்கல்வாங்கல்கள்,  பத்திரங்களற்ற திறைசேரி முறிகளுக்கு மாற்றுதல் , குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாடுகள், மூலதனப் போதுமை, சிறப்பு இடர்நேர்வு ஒதுக்கம், பிணையங்கள் கணக்குகளை வெவ்வேறாக்குதல், பிணையங்களைக் கட்டுக்காப்பில் வைத்திருத்தல், சந்தை மதிப்பீடு, மீள்கொள்வனவு உடன்படிக்கைகள், முன்னோக்கிய வீத உடன்படிக்கைகள், வட்டி வீத பரஸ்பர பரிமாற்றல், நிதியியல் கூற்றுக்கள், பங்கிலாபங்களை வெளிப்படுத்தல் மற்றும் பன்முகப்படுத்தல் என்பனவற்றை உள்ளடக்கியுள்ளன.

கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வதற்காகவும் தேவையானவிடத்து மீட்பு வழிமுறைகளை உருவாக்குவதற்காகவும், முதனிலை வணிகர்களுடன் கிரமமான கூட்டங்களும் அதேபோன்று நேரடியான கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டன. மேலும், வர்த்தக நடவடிக்கைகளில் சிறந்த நடைமுறைகளை ஊக்குவிக்கும் பொருட்டு முதனிலை வணிகர்களுக்காக மத்திய வங்கி ஒழுக்க நடத்தைக் கோவை ஒன்றினை வெளியிட்டதுடன் அவற்றின் இணங்குவிப்புக்களும் கண்காணிக்கப்பட்டன.

இலங்கையின் அங்கீகாரமளிக்கப்பட்ட முதனிலை வணிகா்களின் பட்டியல்