சட்டவாக்கச் சட்டங்கள்

 

நாணய முறைமையும் மத்திய வங்கியும்

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க, இலங்கை மத்திய வங்கிச் சட்டம்

இலங்கை மத்திய வங்கியைத் தாபிப்பதற்காகவும் (422ஆம் அத்தியாயமான) பணச் சட்டத்தை நீக்குவதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும் அத்துடன் அவற்றோடு தொடா்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவாக கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்

1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டம்  (2014 யூன் 30 ஆம் திகதி வரையான திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன) - நீக்கஞ்செய்யப்பட்ட

இலங்கையின் நாணய முறைமையினையும், மத்திய வங்கியினையும் நிறுவுவதற்கும்,  முறைமையை நிருவகித்து ஒழுங்கு முறைப்படுத்துவதற்கும் அத்துடன் அத்தகைய நிர்வகித்தல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் ஆகிய நோக்கத்திற்குத் தேவையான மத்திய வங்கியின் நாணயச் சபை அதிகாரங்கள், தொழிற்பாடுகள் மற்றும் பொறுப்புக்களை வழங்கி விதிப்பதற்கும் அதனுடன் தொடர்பான விடயங்களை வழங்கும் இணைந்த கருமங்களை ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம். எனினும், 2014 யூன் 30 ஆம் திகதிவரையான அனைத்து திருத்தங்களையும் உள்ளடக்கப்பட்டுள்ள இம்மீள்பதிப்பானது நியதிச்சட்ட ரீதியான மீள்பதிப்பொன்றல்ல. இது வசதிப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

 

வங்கித்தொழில்

2024 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க, வங்கித்தொழில் (திருத்தச்) சட்டம்

1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்

2023ஆம் ஆண்டின் 17ஆம் இலக்க வங்கித்தொழில் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்

மத்திய வங்கியின் தீா்மானிப்பு அதிகாரத்துக்காகவும், உாிய காலத்திலானவொரு முறையில் மூலதனம், திரவத்தன்மை, கடனிறுக்கவகையின்மை அல்லது வேறேதேனும் ஆபத்துக்கமைய உாிமம்பெற்ற வங்கியொன்றைத் தீா்மானிப்புச் செய்வதற்கு மத்திய வங்கியினாலும் மற்றும் இலங்கை அரசாங்கத்தினாலும் நடைமுறைப்படுத்தப்பட முடியுமான தீா்மானிப்பு வழிமுறைகளுக்காகவும் ஏற்பாடு செய்வதற்கானதும் நிதி முறைமை உறுதிப்பாட்டை உறுதிப்படுத்தி அத்தகைய வங்கியின் வைப்பாளா்களினதும் கடன் கொடுத்தோாினதும் நலன்களை உறுதிப்படுத்துவதற்கு வளா்ச்சியடைந்துவரும் முயற்சியொன்றாக அத்தகைய வங்கிக்கு புத்துயிரளிப்பதற்கானதும் அத்தகைய உாிமம்பெற்ற வங்கிகளுக்கான வைப்புக் காப்புறுதித் திட்டமொன்றுக்கும் மற்றும் ஒடுக்குதல் செயன்முறைக்கும் ஏற்பாடு செய்வதற்கானதும் அத்துடன் அதனுடன் தொடா்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கானதுமானதொரு சட்டம்.

1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டம் 

வங்கித்தொழில் வியாபாரங்களை கொண்டு நடத்துகின்ற ஆட்களுக்கு உரிமத்தினை வழங்குவதற்கான நடைமுறையொன்று பற்றிய அறிமுகம் மற்றும் தொழிற்பாடு என்பனவற்றை வழங்குவதற்கானதும் வங்கித்தொழில் வியாபாரம் தொடர்பான ஒழுங்குவிதிகளையும் கட்டுப்பாட்டு விடயங்களை, கருமங்களை ஒழுங்குபடுத்தி கட்டுப்படுத்துவதற்கும் அதனுடன் இணைந்த அல்லது அதற்கு இடைநேர் விளைவான கருமங்களை ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம். 

 

நிதி மற்றும் குத்தகைக்குவிடும் கம்பனிகள்

2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதித்தொழில் சட்டம் 

நிதித்தொழிலை ஒழுங்குபடுத்துவதற்கு ஏற்பாடு செய்வதற்கும் அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம். உாிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வையை வலுப்படுத்துவதற்கும் அதிகாரமளிக்கப்படாத நிதி வியாபாரங்களை தடுப்பதற்கும் 1988ஆம் ஆண்டின் 78ஆம் இலக்க நிதிக் கம்பனிகள் சட்டத்தை நீக்கி மாற்றீடு செய்வதன் மூலம் 2011.11.09 அன்று சட்டமாக்கப்பட்டது.

2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க குத்தகைக்குவிடுதல் சட்டம்

குத்தகை வழங்குநர்களின் குத்தகை பெறுநா்களின் அத்துடன் உபகரணங்கள் வழங்குநர்களின் உரிமைகளையும் கடமைகளையும் குறித்துரைப்பதற்கும் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்கும் நிதிக் குத்தகைக்குவிடும் வியாபாரங்களை ஒழுங்குமுறைப்படுத்தி கண்காணிப்பதற்குமான சட்டம். 

 

நுண்பாக நிதி

2016 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நுண்பாக நிதிச் சட்டம்

நுண்நிதியளிப்புத் தொழிலைக் கொண்டு நடாத்துகின்ற கம்பெனிகளுக்கு உரிமமளிப்பதற்காகவும், அவற்றை ஒழுங்குபடுத்துவதற்காகவும் மற்றும் மேற்பார்வை செய்வதற்காகவும்; வரையறுக்கப்பட்ட சேமிப்பு வைப்புக்களை ஏற்றுக்கொள்கின்ற அரசாங்கம்சாரா ஒழுங்கமைப்புக்களை நுண்நிதியளிப்பு அரசாங்கம்சாரா ஒழுங்கமைப்புக்களாகப் பதிவுசெய்வதற்காகவும்; நுண்நிதியளிப்பு அரசாங்கம்சாரா ஒழுங்கமைப்புக்களையும் மற்றும் நுண்கடன்வழங்கு அரசாங்கம்சாரா ஒழுங்கமைப்புக்களையும் ஒழுங்குபடுத்துவதற்காகவும் மேற்பார்வை செய்வதற்காகவும் நியமங்களைத் தாபிப்பதற்கு ஏற்பாடுசெய்வதற்கும்; அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடுசெய்வதற்கானதொரு சட்டம்.

 

வெளிநாட்டுச் செலாவணி

2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம்

வெளிநாட்டுச் செலாவணியை மேம்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் ஏற்பாடுசெய்வதற்கும்; வெளிநாட்டுச் செலாவணியை மேம்படுத்துவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான பொறுப்பை அரசாங்கத்தின் முகவரென்றமுறையில் மத்திய வங்கிக்கு உரித் தாக்குவதற்கும் (423 ஆம் அத்தியாயமான) செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தை நீக்குவதற்கு ஏற்பாடுசெய்வதற்கும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான தொரு சட்டம்.

1953 ஆம் ஆண்டின் 24ஆம் இலக்க செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டம் (2017.11.20 அன்று நடைமுறைக்கு வரும்விதத்தில் நீக்கப்படுகின்றது)

தங்கம், நாணயம், கொடுப்பனவுகள், பிணையங்கள், படுகடன்கள் மற்றும் இறக்குமதி, ஏற்றுமதி, மாற்றல்கள் மற்றும் சொத்துக்களின் தீர்ப்பனவு என்பன தொடர்பாக மத்திய வங்கிக்கு அதிகாரமளிக்கும் விதத்தில் மேலே கூறிய ஏற்பாடுகளை நிர்வகித்து அது தொடர்பான விடயங்களுக்கு வசதியளித்து அதிகாரத்தை வழங்கி கடமைகள் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த இச் சட்டம் வழி செய்கின்றது.

 

ஊழியர் சேமலாப நிதியம்

2012ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய (திருத்தச்) சட்டம்

திருத்தப்பட்டவாறான 1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டம்.

1958ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் மற்றும் திருத்தங்களும் (1998 திசெம்பர் 31 ஆம் திகதி வரையான திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன)

ஊழியர்களில் ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கான சேமலாப நிதியத்தினை நிறுவுவதற்கும் அதனுடன் தொடர்பான விடயங்களை வழங்குவதற்குமானதொரு சட்டமாகும். ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு திருத்தங்கள் காரணமாக, இச்சட்டத்தின் மீள்பதிப்பு வெளியிடப்பபட வேண்டிய தேவை காணப்படுகின்றது. இருப்பினும், 1998 திசெம்பர் 31 ஆம் திகதிவரையான அனைத்து திருத்தங்களையும் உள்ளடக்கப்பட்டுள்ளன.  இம்மீள்பதிப்பானது சட்டரீதியானதொன்றல்ல. வசதிப்படுத்தும் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

 

ஏனையவை சட்ட அமுலாக்கங்கள்

1923ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க உளளூர் திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம்  

இலங்கையில் திறைசேரி உண்டியல்களை வெளியிடுவதன் மூலம் பணத்தைக் கடனாக பெறுவதற்கு வழங்கப்படும் ஒரு கட்டளைச் சட்டமாகும். 

1937ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க பதிவு செய்யப்பட்ட பங்குத்தொகுதி மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் (2004 திசெம்பர் 31 ஆம் திகதி வரையான திருத்தங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன)

இலங்கையில் கடன்களைத் திரட்டிக் கொள்ளும் நோக்கோடு பதிவு செய்யப்பட்ட பங்குகள், அரசாங்க உத்தரவாதப் பத்திரங்கள், கொண்டு வருபவர் முறிகள் என்பனவற்றை உருவாக்கி வெளியிடுவதற்கு இக்கட்டளைச் சட்டம் வகை செய்கின்றது.

2005ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைச் சட்டம்

கொடுப்பனவு, தீர்ப்பனவு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் முறைமைகள்  மத்திய வங்கியின் ஏடுகளில் பிணையங்களை அகற்றுவதற்கான் பணம் தொடர்பான பணிகளை வழங்குவோருக்கான ஒழுங்கு விதிகள் காசோலைகளை இலத்திரனியல் முறையில் சமர்ப்பித்தல்  மற்றும் அவற்றுடன் தொடர்பான அல்லது இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடுசெய்வதற்கானதொரு சட்டம். 

2006ஆம் ஆண்டின் 6ஆம் இலக்க நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் அறிக்கையிடல் சட்டம் 

முறையே பணத்தை தூயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் என்பனவற்றுடன் தொடர்பான தடை செய்தல், கண்டறிதல், புலனாய்வு செய்தல், வழக்குத்தொடுத்தல் போன்றவற்றிற்கு வசதியளிப்பதற்காக, சந்தேகமான நிதியியல் நடவடிக்கைகள் தொடர்பான தரவுகளைச் சேகரிப்பதற்கு இச் சட்டம் வசதியளிக்கின்றது. பணம் தூயதாக்கல் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் போன்றனவற்றை ஒழிப்பதற்கு நுணுக்கமான கண்காணிப்பு வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு கேட்பதற்கும் இச் சட்டத்திற்கு ஏற்புடைத்தான விதத்தில் எல்லா நிறுவனங்களின் நடவடிக்கைகளையும் கண்காணிப்பதற்கு பொறுப்பாகவுள்ள அதிகாரியினை இனங்காண்பதற்கும் மற்றும் இத்துடன் தொடர்பான விடயங்கள் அல்லது இடர்நேர்வு விடங்கள் என்பனவற்றிற்கும் இச் சட்டம் வசதியளிக்கின்றது.

2018ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க தீவிர பொறுப்பு முகாமைச் சட்டம்

இலங்கையில் பொதுப் படுகடன் முகாமைத்துவத்தை மேம்படுத்துவதற்கு தீவிர பொறுப்பு முகாமைத்துவ நோக்கத்திற்காக இலங்கைக்குள்ளேயும் வெளியேயும் கடன்களை திரட்டுவதை அங்கீகரிப்பதற்கும் அதனுடன் இணைந்த அல்லது அதற்கு இடைநேர் விளைவான கருமங்களை ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்.