பொதுமக்கள் விழிப்புணர்வு

இலங்கையில் வியாபாரத்தினை மேற்கொள்வதற்கான படிப்படியான வழி காட்டல்


இப் பிரசுரமானது, தொழில்  முயற்சியாளரொருவர் வியாபாரத்தினை தொடங்கி அதனை நிறுவி அதன் தொழிற்பாடுகளை மூடிவிடுவது  வரையிலுள்ள வெவ்வேறு கட்டங்களில் அவர் மேற்கொள்ள வேண்டிய அனைத்து முக்கிய நடவடிக்கைகள்  தொடர்பான தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது.

கிடைக்கக்கூடிய வடிவம்: PDF

வெளியீட்டுத் திகதி: 2021

ஐ எஸ் பி என்: 978-624-5917-00-6

முன்னைய பதிப்பு:

Eighth Edition

Sixth Edition

 
   

சிற்றேடுகள்

 

இலங்கை மத்திய வங்கி - குறிக்கோள், தொழிற்பாடுகள் மற்றும் நிறுவன ரீதியான அமைப்பு (2019 சனவாி)


மத்திய வங்கியின் பங்கு மற்றும் செயற்பாடு பற்றிய நூல். ஆங்கிலத்தில் கிடைக்கும்

கிடைக்கக்கூடிய வடிவம்: PDF

வெளியீட்டுத் திகதி: 2019 மாச்சு 01

 

இலங்கையில் நிதியியல் பணிகளுக்கான ஒரு வழிகாட்டி (2004) - இரண்டாம் பதிப்பு

நிதியியல் முறைமை, நிறுவனங்கள், உற்பத்திகள் மற்றும் முதலீடுகள் தொடர்பாக விழிப்பூட்டலை அதிகரிப்பதற்கான ஒரு சிறு நூல் ஆங்கிகலத்திலும் சிங்களத்திலும் கிடைக்கும் 

கிடைக்கக்கூடிய வடிவம்: PDF

வெளியீட்டுத் திகதி: December 2004

 

லங்கா செக்குயர் (2004)

பத்திரங்களற்ற பிணையங்கள் தீர்ப்பனவு முறைமையையும், மத்திய வைப்பு முறைமையையும் விபரிக்கின்றது. ஆங்கிலத்தில் நேரடியான கணனி வலையமைப்பில் மட்டும் கிடைக்கும் 

கிடைக்கக்கூடிய வடிவம்: PDF

வெளியீட்டுத் திகதி: 13 February 2004

 

இலங்கையின் நாணயக் குத்திகள் மற்றும் தாள்களின் வரலாறு (2000)

இலங்கையின் நாணயம் தாள்களின் வரலாறு பற்றி இவ் வெளியீடு விபரிக்கிறது. அச்சிடப்பட்ட வடிவில் ஆங்கிலத்தில் மட்டும் கிடைக்கிறது. 

 

லங்கா செற்றில் (2003)

லங்கா செற்றில் முறைமையின் முக்கிய பாகங்களை விபரிக்கின்றது - அதேநேர தீர்ப்பனவு முறைமை, லங்கா செக்குயர் முறைமை, பத்திரங்களற்ற பிணையங்களின் தீர்ப்பனவு முறைமை மற்றும் அரச பிணையங்களுக்கான மத்திய வைப்பகம். ஆங்கிலத்தில், அதேநேரத்தில் மட்டும் கிடைக்கும். 

கிடைக்கக்கூடிய வடிவம்: PDF

 

பன்னாட்டு வர்த்தகம் (2001)

பன்னாட்டு வர்த்தகக் கோட்பாடுகளுக்கு ஓர் அறிமுகம். சிங்களத்தில் மட்டும் கிடைக்கும். 

 

1988 ஆம் ஆண்டின் 78 ஆம் இலக்க நிதிக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட பணிப்புரைகள் மற்றும் விதிகள்

நிதிக்கம்பனிகளுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைகளையும் விதிகளையும் உள்ளடக்கிய ஒரு சிற்றேடு ஆங்கிலத்தில் கிடைக்கிறது. 

 

உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகளுக்கு ஏற்புடைத்தான பணிப்புரைகள், விதிகள், தீர்மானங்கள், அறிவித்தல்கள் மற்றும் வழிகாட்டல்கள்

உரிமம் பெற்ற நிதிக்கம்பனிகளுக்கு விடுக்கப்பட்ட பணிப்புரைகள், விதிகள், தீர்மானங்கள், அறிவித்தல்கள் மற்றும் வழிகாட்டல்களை உள்ளடக்கிய சிற்றேடு. ஆங்கிலத்தில் கிடைக்கும்.

கிடைக்கக்கூடிய வடிவம்: PDF

வெளியீட்டுத் திகதி: November 2014

ISBN: 978-955-575-253-4

 

 

2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதிக் குத்தகைக்கு விடும் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட பணிப்புரைகள்

இச்சிற்றேடு 2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதிக் குத்தகைக்கு விடும் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட பணிப்புரைகளை உள்ளடக்கியுள்ளது. ஆங்கிலத்தில் கிடைக்கும்.

கிடைக்கக்கூடிய வடிவம்: PDF

வெளியீட்டுத் திகதி: November 2012

ஐ எஸ் பி என்: 978-955-575-254-1

 
   

சிற்றேட்டுத் தொடர்கள்

இலங்கை மத்திய வங்கியின் பங்கு, அதன் நடவடிக்கைகள் தொடர்பாக பொது மக்களின் விளக்கத்தை விரிவுபடுத்துவதற்கான கல்வி தொடர்பான சிற்றேடுகள் மிக எளிய மொழியில் எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலம், சிங்களம் தமிழில் கிடைக்கும்.

 

விலை உறுதிப்பாடு(2005) (சிற்றேட்டுத் தொடர் இல.1)

விலை உறுதிப்பாடு என்றால் என்ன, எப்படி இது அளவிடப்படுகிறது, ஏன் இது முக்கியமானது மற்றும் விலை உறுதிப்பாட்டை பாதிக்கும் காரணிகள் என்ன போன்றன விளக்கப்பட்டுள்ளன. பணவீக்கத்தினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் நாணயக் கொள்கைகள் இதனை அடைய எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது, விலை உறுதிப்பாட்டினை பேணுவது போன்றன விபரிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், சிங்களம், தமிழில் கிடைக்கும்

கிடைக்கக்கூடிய வடிவம்: PDF

வெளியீட்டுத் திகதி: October 2005

 

நிதியியல் முறைமை உறுதிப்பாடு (2005)  (சிற்றேட்டுத் தொடர் இல.2) 

நிதியியல் உறுதிப்பாடு என்றால் என்ன, இதை அடைவதற்கு உதவும் காரணிகள் நிதியியல் முறைமையின் உறுதியின்மைக்கான காரணங்களும், அதன் விளைவுகளும் மற்றும் விலை உறுதிப்பாட்டினைப் பேணுவதில் மத்திய வங்கியின் பங்கு என்பன விளக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், சிங்களம், தமிழில் கிடைக்கும் 

கிடைக்கக்கூடிய வடிவம்: PDF

வெளியீட்டுத் திகதி: October 2005

 

செலாவணி வீதம் (சிற்றேட்டுத் தொடர் இல.3)

செலாவணி வீத்தின் உயர்வினையும் தேய்வினையும் நிர்ணயிக்கும் காரணிகளையும் பெயரளவு மற்றும் உண்மைத் தாக்கமுள்ள செலாவணி வீதங்களின் முக்கியத்துவத்தினையும் செலாவணி வீத அமைப்புக்களின் வேறுபாட்டினையும் விளக்குகிறது. செலாவணி மாற்றுவீதத்தினைப் பேணுவதில் மத்திய வங்கியின் பங்கும், வெளிநாட்டுச் செலாவணி பற்றிய ஒரு பார்வையும் உள்ளது. ஆங்கிலம், சிங்களம், தமிழில் கிடைக்கும் 

கிடைக்கக்கூடிய வடிவம்: PDF

வெளியீட்டுத் திகதி: April 2006

 

பிரமிட் திட்டங்களினால் ஏற்படுத்தப்பட்ட அபாயமும் வலையமைப்பு சந்தைப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டங்களும் (2006) (சிற்றேட்டுத் தொடர் இல.4)

பல்வேறு வகையான பிரமிட் திட்டங்களின் தன்மை பற்றியும் இதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களும், அவற்றினை அடையாளங்காணும் வழிகளும் விளக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், சிங்களம், தமிழில் கிடைக்கும்

கிடைக்கக்கூடிய வடிவம்: PDF

வெளியீட்டுத் திகதி: May 2006

 

பொது மக்களிடமிருந்து வைப்புக்களை ஏற்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனங்கள் (2006) சிற்றேட்டுத் தொடர் இல.5 

பொதுமக்களிடமிருந்து சட்ட ரீதியாக வைப்புக்களை ஏற்பதற்கு அதிகாரமளிக்கப்பட்ட பல்வேறு வகைப்பட்ட நிறுவனங்கள.; ஆங்கிலம், சிங்களம், தமிழில் கிடைக்கும 

கிடைக்கக்கூடிய வடிவம்: PDF

வெளியீட்டுத் திகதி: May 2006

 

பணத்தை தூய்தாக்கலைத் தடுத்தலும், பயங்கரவாதத்திற்கு நிதியிடுவதனை ஒழித்தலும் (சிற்றேட்டுத் தொடர் இல.6) 

பணத்தை தூய்தாக்கலிலும், பயங்கரவாதத்திற்கு நிதியிடுதல் தொடர்பான குற்றங்கள் பணத் தூய்தாக்குவோரினால் கடைப்பிடிக்கப்படும் முறைகள், பணத் தூய்தாக்கலிலும், பயங்கரவாதத்திற்கு நிதியிடுதலிலும் இணைந்துள்ள எதிர்மாறான விளைவுகள் என்பன விபரிக்கப்பட்டுள்ளன. பணத்தூய்தாக்கல் தொடர்பான சட்டங்களும், இத்தகைய சட்டங்களினால் நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள கடமைகள், பொறுப்புகள் என்பனவும் விளக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், சிங்களம், தமிழில் கிடைக்கும் 

கிடைக்கக்கூடிய வடிவம்: PDF

வெளியீட்டுத் திகதி: July 2006

 

லங்கா செக்குயர் (2006) (சிற்றேட்டுத் தொடர் இல.7)

இது 'லங்கா செக்குயர்' முறையினை விளக்குகிறது. இது, பத்திரங்களற்ற பிணையங்கள், தீர்ப்பனவு முறைமை மற்றும் அரச பிணைகளுக்கான மத்திய வைப்பக முறை என்பனவற்றை அடக்கியுள்ளது. ஆங்கிலம், சிங்களம், தமிழில் கிடைக்கும்

கிடைக்கக்கூடிய வடிவம்: PDF

வெளியீட்டுத் திகதி: July 2006