நிறுவனக் கட்டமைப்பு

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம், இலங்கை மத்திய வங்கியானது இடையறாவழியுரிமையையும் பொது இலச்சினையையும் கொண்ட கூட்டிணைக்கப்பட்ட குழுவொன்றாக இருக்கின்றது. மத்திய வங்கியானது நிருவாக மற்றும் நிதியியல் தான்னாட்சியைக் கொண்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியானது தொழிற்பாட்டில் இரு பிரதான சபைகளைக் கொண்டுள்ளது,அவை,

  1. ஆளும் சபை
  2. நாணயக் கொள்கைச் சபை

 

ஆளும் சபை

இலங்கை மத்திய வங்கியின் அலுவல்களினது நிருவாகத்தையும் முகாமையையும் மேல்நோக்குகின்ற மற்றும் நாணயக்கொள்கை தவிர மத்திய வங்கியின் பொதுக்கொள்கையைத் தீர்மானிக்கின்ற பொறுப்புடைமை மத்திய வங்கியின் ஆளும் சபைக்கு பொறுப்பிக்கப்பட்டுள்ளது.ஆளும் சபையானது மத்திய வங்கியின் ஆளுநரையும் (ஆளும் சபையின் தலைவராக இருக்க வேண்டும்), பொருளியல், வங்கித்தொழில், நிதி, கணக்கீடு மற்றும் கணக்காய்வு, சட்டம் அல்லது இடர்நேர்வு முகாமைத்துவம் என்பவற்றில் நிபுணத்துவத்தைக் கொண்ட ஆறு உறுப்பினர்களையும் கொண்டிருத்தல் வேண்டும். ஆளும் சபையின் செயலாளர் மத்திய வங்கியின் ஊழியரொருவாக இருப்பதுடன் மத்திய வங்கியின் ஆளுநரினால் பெயர்குறித்து நியமிக்கப்படுதல் வேண்டும்.

 

ஆளும் சபை உறுப்பினர்கள்

 

முனைவர். பி. நந்தலால் வீரசிங்க

ஆளுநா்
ஆளுகைச் சபையின் தலைவர்

நிஹால் பொன்சேகா

நியமிக்கப்பட்ட உறுப்பினா்
 

முனைவர். ரவி ரத்நாயக்க

நியமிக்கப்பட்ட உறுப்பினா்
 

 

அனுஷ்க விஜயசிங்க

நியமிக்கப்பட்ட உறுப்பினா்

விஷ் கோவிந்தசாமி

நியமிக்கப்பட்ட உறுப்பினா்

ரஜீவ் அமரசூரிய

நியமிக்கப்பட்ட உறுப்பினா்

   

மணில் ஜயசிங்க

நியமிக்கப்பட்ட உறுப்பினா்

   

 

நாணயக் கொள்கைச் சபை

உள்நாட்டு விலையின் உறுதிப்பாட்டை அடைவதற்கும் பேணவதற்குமென நெகிழ்வான பணவீக்க இலக்கிடல் கட்டமைப்புக்கிணங்க இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கையை வகுத்தமைத்தலும் நெகிழ்வான செலாவணி வீதத் தோற்றப்பாட்டை நடைமுறைப்படுத்தலும் மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபைக்கு பொறுப்பிக்கப்பட்டுள்ளது. நாணயக் கொள்கைச் சபையானது, இலங்கையின் பேரண்ட பொருளாதார மற்றும் நிதிநிலைமையைக் கணக்கிற்கெடுத்து, பணத்தின் வழங்குகை, பணம் கிடைக்கக்கூடியமை மற்றும் பணத்தின் கொள்விலை என்பவற்றை ஒழுங்குபடுத்துதல் வேண்டும். நாணயக் கொள்கைச் சபையானது ஆளுநரையும் (ஆளும் சபையின் தலைவராக இருக்க வேண்டும்), பொருளாதாரம் மற்றும் நிதியில் இரு நிபுணர்களையும், விலை உறுதிப்பாட்டுக்கு பொறுப்பாகவுள்ள மத்திய வங்கியின் பிரதி ஆளுநரையும், நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக்கு பொறுப்பாகவுள்ள மத்திய வங்கியின் பிரதி ஆளுநரையும் கொண்டிருக்கின்றது. நாணயக் கொள்கைச் சபையின் செயலாளர் மத்திய வங்கியின் ஊழியரொருவாக இருப்பதுடன் மத்திய வங்கியின் ஆளுநரினால் பெயர்குறித்து நியமிக்கப்படுதல் வேண்டும். 

நாணயக் கொள்கைச் சபையின் உறுப்பினர்கள் 

 

முனைவர். பி. நந்தலால் வீரசிங்க

ஆளுநா்
நாணயக் கொள்கைச் சபையின் தலைவர்

நிஹால் பொன்சேகா

நியமிக்கப்பட்ட உறுப்பினா்
 

முனைவர். ரவி ரத்நாயக்க

நியமிக்கப்பட்ட உறுப்பினா்
 

அனுஷ்க விஜயசிங்க

நியமிக்கப்பட்ட உறுப்பினா்

விஷ் கோவிந்தசாமி

நியமிக்கப்பட்ட உறுப்பினா்

முனைவர். (செல்வி) துஷ்னி வீரகோன்

நியமிக்கப்பட்ட உறுப்பினா்

முனைவர். பிரியங்க துணுசிங்க

நியமிக்கப்பட்ட உறுப்பினா்

ரஜீவ் அமரசூரிய

நியமிக்கப்பட்ட உறுப்பினா்

மணில் ஜயசிங்க

நியமிக்கப்பட்ட உறுப்பினா்

 

திருமதி. ரி. எம். ஜே. வை. பி. பர்னாந்து

மூத்த துணை ஆளுநா்

திருமதி. கே.எம்.ஏ.என். டவுலகல

துணை ஆளுநா்