முனைவர். பிரியங்க துணுசிங்க

முனைவர் பிரியங்க துணுசிங்க பொருளாதாரத் திணைக்களத்தின் பொருளாதார பேராசிரியரும் கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கையின் தகவல் தொழில்நுட்பத் திணைக்களத்தின் தலைவருமாவார். இவர் அறிவித்தல், ஆராய்ச்சி, பயிற்சியளித்தல் மற்றும் ஆலோசனை வழங்கலில் ஏறத்தாழ 20 ஆண்டுகால அனுபவத்தினைக் கொண்டவர். அவரின் கற்பித்தல் துறைகளாக பொருளியலளவை, புள்ளிவிபரம், கணியம்சார் நுணுக்கங்கள், நிதியியல் நிறுவனங்கள், அபிவிருத்திப் பொருளாதாரம் மற்றும் பன்னாட்டு வர்த்தகம் மற்றும் நிதி என்பன காணப்படுகின்றன. அவரின் ஈடுபாட்டிற்குரிய ஆராய்ச்சித் துறைகளாக பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகள், வேளாண்மை உள்ளிட்ட வளர்ச்சி மற்றும் அபிவிருத்தி, நிதியியல் சந்தை, வறுமை, தொழில், பொதுப்படுகடன், கல்வி மற்றும் பன்னாட்டு வர்த்தகம் மற்றும் முதலீடு என்பன காணப்பட்டன. முனைவர் துணுசிங்க ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு, உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு, வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி மீதான ஐக்கிய நாடுகள் மாநாடு மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி அமைச்சு, கைத்தொழில்கள் அமைச்சு, தொழில் அமைச்சு மற்றும் வேளாண்மை அமைச்சு என்பனவற்றுக்கான ஆலோசனையாளராக பணியாற்றியிருக்கின்றார். அவர் புகழ்பூத்த பல்வேறு சஞ்சிகைகளிலும் அநேக ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருப்பதுடன் ஆராய்ச்சிக்காக அநேக விருதுகளையும் வென்றிருக்கின்றார். இவர் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கான கிரமமாகப் பங்களிப்பாளராகவும் இருந்து வருகின்றார்.