அதிகாரம்பெற்ற பணத்தரகர்கள் ஒழுங்குவிதிகள்

1949 ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணய விதிச் சட்டத்தின் 10ஆம் பிரிவின்கீழ் விடுக்கப்பட்ட 2013ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பணத்தரகர் ஒழுங்குவிதிகளின் கீழ் அதிகாரம் பெற்ற பணத்தரகர்கள் ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றன. இவ்வொழுங்கு விதி 2013 பெப்புருவரி 15 இலிருந்து நடைமுறைக்கு வந்ததுடன் இது 2016 யூனில் திருத்தம் செய்யப்பட்டது. அதிகாரம் பெற்ற பணத்தரகர்களை ஒழுங்குமுறைப்படுத்துவதன் நோக்கம் சந்தைப் பகுப்பாய்வு மற்றும் கொள்கை நடவடிக்கைகளுக்காக பணச் சந்தையின் துணைத் துறைகளில் விலைகளைக் கண்டறியும் வினைத்திறன் மீது தகவல்களைப்பெற்றுக் கொள்வதேயாகும். பணச் சந்தையின் 

இந்நோக்கத்திற்காக இரண்டு மேற்பார்வை முறைகள் காணப்படுகின்றன. ஒன்று தலத்திற்கு வெளியேயான கண்காணிப்பு (தொடர்ச்சியான கண்காணிப்பு) இதில் அதிகாரம் பெற்ற பணத்தரகர்கள் அதேநேர கணனி வழி மற்றும் மூலமும் அதற்கு வெளியிலும் பெறப்பட்ட தகவல்களினூடாக பெறப்பட்ட தகவலகளினூடாக மேற்பார்வை செய்யப்படுகின்றன. இரண்டாவது முறை யாதெனில் தலத்திலான கண்காணிப்பு முறை இதில் அதிகாரம்பெற்ற பணத்தரகர்கள் நடைமுறையிலுள்ள ஒழுங்குவிதிகளுக்கு இணங்கி ஒழுகுகின்றார்கள் என்பதனை பரிசோதித்துக் கொள்வதற்காக அவர்களின் பணிமனைகளுக்கு மத்திய வங்கியின் அலுவலர்கள் விஜயம்செய்து கண்காணிப்பு மேற்கொள்வதாகும். ஒவ்வொரு பணத்தரகரும் குறைந்தபட்சம் ஆண்டிற்கு ஒரு தடவையேனும் மேற்பார்வை செய்யப்படுகின்றனர்.

அதிகாரம்பெற்ற பணத்தரகர்கள் பணம், வெளிநாட்டுச் செலாவணி மற்றும் அரச பிணையங்கள் சந்தைகளில் இடையேற்பாட்டாளர்களாக செயற்படுகின்றனர். இவர்கள் விலைக்குறிப்பீடுகளையும் கேட்புக்களையும் வழங்குவதன் மூலம் பங்கேற்கும் நிறுவனங்களிடையேயான கொடுக்கல்வாங்களுக்கு வசதியளிக்கின்றனர்.

இலங்கையின் அங்கீகாரமளிக்கப்பட்ட பணத்தரகா் கம்பனிகளின் பட்டியல்