வங்கித்தொழில் துறை

உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளையும் உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகளையும் உள்ளடக்கியிருக்கும் இலங்கையின் வங்கித்தொழில் துறை நிதியியல் முறைமையில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் நிதியியல் முறைமையின் மொத்தச் சொத்துக்களில் பெரும் பங்கிற்கு வகைகூறுவதாகவும் இருக்கின்றது. வங்கிகள் முழுப் பொருளாதாரத்திற்கும் திரவத்தன்மையினை வழங்குவதிலும் சொத்துக்களின் இடர்நேர்வுப் பண்புத்தன்மைகளை பரிமாற்றுவதிலும் ஈடுபட்டிருப்பதனால் இலங்கையின் நிதியியல் முறைமையில் இன்றியமையாத வகிபாகத்தினை ஆற்றுகின்றன.

வங்கிகள் கொடுப்பனவுப் பணிகளை வழங்குவதில் ஈடுபட்டிருப்பதுடன் இதன் மூலம் அனைத்து நிறுவனங்களும் அவற்றின் நிதியியல் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்வதற்கு வசதியளிக்கப்படுகின்றது. மறுபுறத்தில், வங்கிகள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முதிர்ச்சியில் காணப்படும் பொருத்தமற்ற தன்மை மற்றும் அவற்றிற்கிடையேயான தொடர்புகள் என்பனவற்றின் ஓரளவு காரணமாக அவை முறைமையியல் சார்ந்த பாதிக்கப்படக்கூடிய தன்மையினை உருவாக்கக் கூடியனவாக இருந்தன. ஆகவே, வங்கிகள் நிதியியல் முறைமையின் நம்பகத்தன்மையினைப் பேணுவதில் பங்களிப்பினைக் கொண்டிருப்பதனாலும், ஏதேனும் முறிவுகள் மற்றைய அனைத்து நிதியியல் மற்றும் நிதியியலல்லா நிறுவனங்களையும் இறுதியில் பொருளாதாரத்தின் நடவடிக்கைகளின் மீதும் பாதிப்பினை ஏற்படுத்தும் சாத்தியங்களைக் கொண்டிருப்பதனாலும் வங்கிகளின் ஆற்றல் வாய்ந்த தன்மை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் காணப்படுகிறது.

சொத்துக்களின் தன்மை மற்றும் வழங்கப்படும் பணிகளின் அளவு என்பனவற்றின் நியதிகளில், வங்கித்தொழில் முறைமையிலுள்ள நிதியியல் நிறுவனங்களின் வகையில், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் தனிப்பெரும் முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன. முழு நிதியியல் முறைமைச் சொத்துக்களிலும் மிக உயர்ந்த சந்தைப் பங்கினை உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் கொண்டிருப்பதன் மூலம் இவை நிதியியல் முறைமையில் ஆதிக்கம் கொண்டிருக்கின்றன. ஆகவே, இலங்கை நிதியியல் முறைமையின் ஆரோக்கியம், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளின் ஆற்றல் வாய்ந்த தன்மையில், முக்கியமாக, முறையியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகள் என பொதுவாகக் குறிப்பிடப்படும் ஆறு பாரிய உரிமம் பெற்ற வங்கிகளின் செயலாற்றத்திலும் நிதியியல் பலத்திலும் தங்கியிருக்கிறது.

உரிமம் பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கிகள் துறை கொடுப்பனவு வட்டத்தில் முக்கிய இடையேற்பாட்டு வகிபாகத்தினை ஆற்றாமையின் காரணமாக அவற்றின் முறையியல் சார்ந்த முக்கியத்துவம் உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுடன் ஒப்பிடுகையில் அளவு மற்றும் நிதியியல் முறைமையில் அவற்றின் தாக்கம் ஆகிய இரண்டு நியதிகளிலும் குறைவாகவே காணப்படுகின்றது.

உாிமம்பெற்ற வா்த்தக வங்கிகளின் பட்டியல்

உாிமம்பெற்ற சிறப்பியல்வாய்ந்த வங்கிகளின் பட்டியல்