நிதியியல் முறைமை உறுதிபாட்டுக் குழு

நாணய விதிச் சட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் இரு மையக் குறிக்கோள்களில் ஒன்று நிதியியல் முறைமை உறுதிப்பாடு என்பதாகும். இக்குறிக்கோளை நிறைவேற்றுவதை நோக்கி ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியை உறுதிப்படுத்தும் பொருட்டு> நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழு 2003 நவெம்பரில் தாபிக்கப்பட்டது.

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழுவின் பிரதான பணிகள் பின்வருவனவற்றிக்காக மேற்கொள்ளப்படுகின்றன:

  • உள்நாட்டு நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை பாதிக்கின்ற ஒத்தசூழலைச் சார்ந்தும் முறைமை சார்ந்தும் இடர்நேர்விற்கு அதிகரிப்பை ஏற்படுத்தக்கூடிய சந்தை மற்றும் பொருளாதார காரணிகள்/ வெளிவாரி விளைவுகள் என்பவற்றில் பரந்துபட்டு காணப்படும் முறைசார்ந்த பேரண்ட முன்மதியுடைய அணுகுமுறையை ஒருங்கிணைத்து கண்காணித்தல். நிதியியல் சுழற்சியின் விரிவான கட்டம் மற்றும் சுருக்கமடைந்த கட்டம் ஆகிய காலப்பகுதியிலும் அத்துடன் நிதியியல் நிறுவனங்களின் அல்லது கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமை அல்லது கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளின் குறைவான தொழிற்பாடு அல்லது தொழிற்பாடின்மை என்பவற்றின் இடைத்தொடர்பின் காரணமாக இத்தகைய சந்தை மற்றும் பொருளாதாரக் காரணிகள்/ வெளிவாரி விளைவுகள் என்பன எழக்கூடும்.
  • சாத்தியமான முறைமைசார்ந்த கரிசனைகளை இனங்காணுதல் மற்றும் இடர்நேர்வுகளைத் தணிப்பதற்கான பொருத்தமான கொள்கை விதந்துரைப்புக்களை உருவாக்குதல் அத்துடன் இலங்கையில் கொடுப்பனவு> கொடுத்துத் தீர்த்தல் முறைமைகளை உருவாக்கி நிலைப்படுத்தல் ஆகிய நோக்குடன் இலங்கையில் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளின் போதுமாந்தன்மை, வினைத்திறன் மற்றும் ஒட்டுமொத்த உறுதிப்பாடு என்பவற்றை மதிப்பீடுசெய்தல்.
  • ஆளுநரினதும் நாணயச் சபையினதும் பரிசீலனைக்காக தற்போதைய மற்றும் புதிய சட்டங்களுக்குள் ஒவ்வொரு வெளிவாரி விளைவுகளையும் அதேபோன்று கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளையும் கருத்திற்கொண்டு> நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை ஊக்குவிப்பதற்கு தேவையான முறைமைசார்ந்த கட்டுப்பாடு வழிமுறைகளையும் பேரண்ட முன்மதியுடைய வழிமுறைகளையும் உருவாக்கி விதந்துரைத்தல்.

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழுவின் உள்ளமைப்பு பின்வருமாறு

தலைவர்

நிதியியல் துறை ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வை என்பவற்றிற்கு பொறுப்பாகவுள்ள துணை ஆளுநர்

உறுப்பினர்கள்

பொருளாதாரக் கொள்கை ஆலோசனைக்குப் பொறுப்பாகவுள்ள துணை ஆளுநர்
இயலாற்றலைக் கட்டியெழுப்புதல் மற்றும் ஆதரவிற்குப் பொறுப்பாகவுள்ள துணை ஆளுநர்
பேரண்டமுன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களத்திற்கு பொறுப்பாகவுள்ள உதவி ஆளுநர்
வங்கித்தொழில் மேற்பார்வைத் திணைக்களத்திற்கு பொறுப்பாகவுள்ள உதவி ஆளுநர்
வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்திற்கு பொறுப்பாகவுள்ள உதவி ஆளுநர்
பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்திற்கு பொறுப்பாகவுள்ள உதவி ஆளுநர்
வெளிநாட்டுச் செலாவணித் திணைக்களத்திற்கு பொறுப்பாகவுள்ள உதவி ஆளுநர்
கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு திணைக்களத்திற்கு பொறுப்பாகவுள்ள உதவி ஆளுநர்
புள்ளிவிபரத் திணைக்களத்திற்கு பொறுப்பாகவுள்ள உதவி ஆளுநர்
பன்னாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களத்திற்கு பொறுப்பாகவுள்ள உதவி ஆளுநர்
உள்நாட்டுத் தொழிற்பாடுகள் திணைக்களத்திற்கு பொறுப்பாகவுள்ள உதவி ஆளுநர்
தகவல் தொழில்நுட்பத் திணைக்களத்திற்கு பொறுப்பாகவுள்ள உதவி ஆளுநர்
பொதுப் படுகடன் திணைக்களத்திற்கு பொறுப்பாகவுள்ள உதவி ஆளுநர்
தீர்மானம் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களத்திற்கு பொறுப்பாகவுள்ள உதவி ஆளுநர்
சட்ட மற்றும் இணங்குவிப்புத் திணைக்களத்திற்கு பொறுப்பாகவுள்ள உதவி ஆளுநர்
நிதியியல் உளவறிதல் பிரிவு திணைக்களத்திற்கு பொறுப்பாகவுள்ள உதவி ஆளுநர்
பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புப் பணிப்பாளர்
வங்கி மேற்பார்வைப் பணிப்பாளர்
வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைப் பணிப்பாளர்
பொருளாதார ஆராய்ச்சிப் பணிப்பாளர்
வெளிநாட்டுச் செலாவணிப் பணிப்பாளர்
கொடுப்பனவு மற்றும் தீhப்பனவுப் பணிப்பாளர்
தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர்
புள்ளிவிபரப் பணிப்பாளர்
பன்னாட்டுத் தொழிற்பாடுகள் பணிப்பாளர்
உள்நாட்டுத் தொழிற்பாடுகள் பணிப்பாளர்
பொதுப்படுகடன் கண்காணிப்பாளர்
தீர்மானமெடுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் பணிப்பாளர்
சட்ட மற்றும் இணங்குவிப்புப் பணிப்பாளர்
நிதியியல் உளவறிதல் பிரிவு

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழுவிற்கான செயலாளர்

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழுவிற்கான செயலாளர்

தேவைப்படும் போதும் தேவைப்படும்வாறும் ஆகக்குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழு ஒன்றுகூடுகின்றது. இத்தகைய கூட்டங்களில்> நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டுடன் தொடர்புடைய பிரச்சினைகளையும் கரிசனைகளையும் பற்றி குறித்த திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட அறிக்கைகளை உறுப்பினர்கள் பகுப்பாய்வு செய்கின்றனர். பேரண்டமுன்மதியுடைய மற்றும் நுண்பாகமுன்மதியுடைய குறிகாட்டிகள் போன்ற நிதியியல் துறை உறுதிப்பாட்டுக் குறிகாட்டிகளை கண்காணித்தலை உள்ளடக்குகின்ற கண்காணிப்பினூடாக நிதியியல் முறைமைக்கான இடர்நேர்வுகள் அடையாளங்காணப்பட்டு அளவிடப்படுகின்றன. இத்தகைய இடர்நேர்வுகளைக் குறைப்பதற்கும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டை பேணுவதற்கும் தேவையான வழிமுறைகள் மற்றும் கொள்கைகள் பற்றிய விதந்துரைப்புக்களை நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழு உருவாக்கி ஏற்றுக்கொள்கின்றது என்பதுடன் அத்தகைய விதந்துரைப்புக்கள் அதனைத்தொடர்ந்து குறித்த உறுப்பினர் திணைக்களங்களினூடாக நாணயச் சபைக்கு சமர்ப்பிக்கப்டுகின்றன.