ஊழியர் சேம நிதியம்

ஓய்வூதிய சலுகைகளை அனுபவிக்காத தனியார் மற்றும் அரச சார்பான துறை ஊழியர்களுக்கு கட்டாயமாக வரையறுக்கப்பட்ட பங்களிப்பு ஓய்வூதிய திட்டமாக 1958 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க சட்டத்தின்; கீழ் ஊழியர் சேமலாப நிதியம் (ஊசேநி) நிறுவப்பட்டது. இலங்கையில் மிகப் பெரிய ஒரு ஓய்வூதிய நிதியமாக இருப்பதோடு, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஊ.சே.நிதியமானது ரூ. 3,460 பில்லியனான ஒரு சொத்து அடிப்படையை முகாமை செய்கின்றது.

சட்டத்தின் விதிகளின் படி, அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் என்பன நிதியத்தின் கட்டுக்காப்பாளர் என்ற முறையில் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதே வேளையில் தொழில் ஆணையாளர் பொது நிர்வாகியாக செயற்படுகின்றார். நிதி முகாமைத்துவமானது இலங்கை மத்திய வங்கியின் ஊ.சே.நி. திணைக்களம்இ நாணயச் சபைக்கு சட்டத்தினால் ஒப்படைக்கப்பட்ட அதிகாரங்கள், கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்ற வசதியளிக்கின்றது.

தற்போது நிதியத்தின் உறுப்பினர்களுக்கான கட்டாய குறைந்தபட்ச பங்களிப்பு வீதம் அவர்களின் வேலைவாய்ப்பின் மொத்த மாத வருமானத்தின் 20 சதவீதமாகும். தொழில்தருநர்கள் மற்றும் ஊழியர்கள் (உறுப்பினர்கள்) ஊ.சே.நிதியத்திற்கு முறையே குறைந்தபட்சம் உறுப்பினரின் மாதாந்த மொத்த வருமானத்தில் 12 சதவீதம் மற்றும்; 8 சதவீதம் பங்களிப்பு செய்ய வேண்டும். உறுப்பினர்களினுடைய ஊ.சே.நி கணக்கில் திரண்ட மீதியாக அவர்களுடைய வேலை சூழலில் முதிர்ச்சியடைந்த நிலையில் வளர்ந்து வருகின்ற ஊ.சே.நிதியத்தின் நிலுவையானதுஇ இலங்கை மத்திய வங்கியினால் பேணப்பட்டு திறைசேரி முறிகள்இ திறைசேரி உண்டியல்கள்இ பங்குகள் மற்றும் தொகுதிக் கடன் பத்திரங்கள் என்பவற்றில் முதலீடு செய்யப்படுகின்றன. வருமான வீதத்தைப் பொறுத்துஇ வருடாந்த வட்டி வீதமானது தீர்மானிக்கப்பட்டுஇ ஊழியரின் கணக்கில் வைப்பிலிடப்;படுகின்றது.

ஊ.சே.நிதிய உறுப்பினர்கள்இ பெண்களிற்கு 50 வயதும் ஆண்களிற்கு 55 வயதும் என்ற ஓய்வூதிய வயதினை அடையும் போது அவர்களின் ஓய்வூதிய சலுகைகளை (பங்களிப்புகள் மற்றும் திரட்டப்பட்ட வட்டி) கோர தகுதியுடையவர்களாவர். மேலும்இ உறுப்பினர்கள்இ குடிபெயர்வு, நிரந்தர அங்கவீனம், திருமணம் காரணமாக வேலைவாய்ப்பை விட்டு வெளியேறுதல் (பெண் உறுப்பினர்களுக்கு மட்டும்) மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடிய வேலைவாய்ப்பில் சேருதல் போன்ற நிகழ்வுகளில் தங்கள் ஊ.சே.நிதிய கணக்குகளிலிருந்து நிதியை மீளப்பெற உரித்துடையவர்கள். மேலும், ஒரு உறுப்பினரின் மரணத்தின் போது இறந்த உறுப்பினரின் சட்டபூர்வ வாரிசுகள்; சலுகைகளைப் பெற தகுதியுடையவர்களாவர்.

ஓய்வூதிய சலுகைகளுக்கு மேலதிகமாக, ஊ.சே.நிதிய உறுப்பினர்களுக்கு ஊ.சே.நிதியத்துடன் அவர்களின் உறுப்பினர் கணக்குகளின் வரவில் இருக்கின்ற மீதிகளை அடமானம் வைத்து அங்கீகரிக்கப்பட்ட ஐந்து கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து வீடமைப்பு நோக்கங்களுக்காகக் கடன்களைப் பெறுவதற்கு ஊ.சே.நிதியம் வசதி செய்கின்றது. மேலும், 2012 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, ஊ.சே.நிதி (திருத்தம்) சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளபடி, 2015 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில்; உறுப்பினர்கள் 10 வருடங்களுக்கும் மேலாக சேவை செய்திருப்பதோடு; ரூ. 300,000 க்கும் அதிகமான ஊ.சே.நிதியக் கணக்கு மீதியைக் கொண்டிருப்பின்இ வீடு கட்டுதல் அல்லது மருத்துவ சிகிச்சையின் நோக்கத்திற்காக அவர்களின் உறுப்பினர் கணக்குகளிலிருந்து 30 சதவீதம் வரை (உயா்ந்தபட்சம் ரூ.2,000,000) மீளப் பெற உரிமை உண்டு.