நிதியியல் வசதிக்குட்படுத்தல்

நிதியியல் அறிவு பற்றிய பாடவிதானம்

இப் பாடவிதானம் பலதரப்பட்ட கல்விசார் மற்றும் விழிப்புணர்வு தளங்கள் முழுவதும் ஈடுப்படுத்தப்படுவதற்காக உறுதியான தரப்படுத்தப்பட்ட வளமாக பணியாற்றும் விதத்தில் மிகவும் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப் பாடவிதானத்தின் கட்டமைப்பு பரந்தளவிலான நிதியியல் அறிவுத் தேவைகளை கூட்டாக தீர்க்கும் ஏழு உபாய ரீதியாக வடிவமைக்கப்பட்ட, வசதிக்குட்படுத்தும் அத்தியாயங்களை உள்ளடக்கியுள்ளது: பொருளாதாரச் சூழல், நிதியியல் சூழல், தனிப்பட்ட நிதி, நுண்பாக சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளுக்கான நிதியியல் முகாமைத்துவம், டிஜிட்டல் நிதியியல் அறிவு, நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு மற்றும் வரிகள் பற்றிய அறிவு.

இலங்கையின் நிதியியல் அறிவு வழிகாட்டல் (2024-2028)

இலங்கையில் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தலின் நிதியியல் அறிவு மற்றும் இயலளவைக் கட்டியெழுப்புதலின் கீழ் இலங்கையின் இந்நிதியியல் அறிவு வழிகாட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அனைத்து நிதியியல் அறிவு சேவை வழங்குநா்களுக்குமான வழிகாட்டியொன்றாக இவ்வழிகாட்டல் பணியாற்றி நிதியியல் ரீதியாக அறிவுடைய இலங்கையினை அடைவதற்கு அத்தகைய நடத்தை மாற்றங்களை எய்துவதற்கான வழிகளை வழங்குகின்றது.

தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாய நூல்

இத்தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயமானது இலங்கையில் நிதியியல் ரீதியாக வசதிக்குட்படுத்தும் தன்மையினை மேம்படுத்துவதற்கு ஒரு திசையில் நின்று தொழிற்படுவதற்கு அனைத்து ஆா்வலா்கள் மூலமும் பயன்படுத்தக்கூடிய நீண்டகால, அனைத்தையுமுள்ளடக்கிய, தரநியமப்படுத்தப்பட்ட, நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட அணுகுமுறையினை வழங்குகின்றது.

இலங்கை நிதியியல் வசதிக்குட்படுத்தல் அளவீடு - 2021 

"இலங்கையின் நிதியியல் அறிவு அளவீடு - 2021" வௌியீடானது இலங்கையின் தேசிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் உபாயத்தின் கீழ் பன்னாட்டு நிதிக் கூட்டுத்தாபனத்தின் உதவியுடன் இலங்கை மத்திய வங்கியினால் நடாத்தப்பட்ட முதன் முதல் நாடளாவிய நிதியியல் வசதிக்குட்படுத்தல் அளவீட்டில் முக்கியமாக அளவீட்டில் கண்டறிந்தவைகளை உள்ளடக்குகின்றது. பொருத்தமான கொள்கை வழிமுறைகளை வகுக்கும் நோக்குடன் மக்கள் தொகைகளுக்கிடையில் நிதியியல் அறிவு மட்டத்தினை இவ்வளவீடு மதிப்பிட்டது. அளவீட்டு வௌியீடானது, நிதியியல் அறிவு எண்ணக்கருவினுள் நிதியியல் அறிவு, எண்ணப்பாங்குகள் மற்றும் நடத்தைக் கூறுகளின் கீழ் நிதியியல் அறிவுப் புள்ளிகளுடன் இணைந்து இலங்கையில் நிதியியல் அறிவு பற்றிய ஒட்டுமொத்த அளவினை எடுத்துரைக்கின்றது. நிதியியல் வசதிக்குட்படுத்தல் துறையில் ஆர்வமுடையவா்களுக்கு இவ்வௌியீடு பயனுள்ள தகவல் சேகாிப்பொன்றாக அமைந்துள்ளது.