பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பு

பேரண்ட முன்மதியுடைய கொள்கையானது ஓட்டுமொத்த முறைமையினையும் பாதிக்ககூடிய  இடர்நேர்வுகளைக் குறைத்தல் மற்றும் தாக்குப்பிடிக்கும் தன்மையினை மேம்படுத்தல் என்பன  வாயிலாக பாதகமான நிகழ்வுகளுக்கு ஈடுகொடுப்பதற்கான நிதியியல் முறைமையின் இயலுமையினை மேம்படுத்துதல் ஊடாக நிதியியல் முறைமையின் உறுதிப்பாட்டினை பாதுகாப்பதை நோக்காகக் கொள்கிறது.

ஓட்டுமொத்த முறைமையினையும் பாதிக்ககூடிய  இடர்நேர்வு என்பது ஒட்டுமொத்த நிதியியல் முறைமையினதும் அல்லது நிதியியல் சேவை வழங்குவதை இடையூறுக்குள்ளாக்குகின்ற அதன் ஒரு பகுதி முறிவடைகின்ற இடர்நேர்வு என்பதுடன் கடுமையான பொருளாதார வீழ்ச்சியிலிருந்து தோன்றுகின்றது. ஓட்டுமொத்த முறைமையினையும் பாதிக்ககூடிய  இடர்நேர்வுகளை இனங்கண்டு தணிப்பதற்கு பேரண்ட முன்மதியுடைய மேற்பார்வை மாத்திரம் போதாது என்பதனை உலகளாவிய நிதியியல் நெருக்கடி எண்பித்துள்ளது. ஓட்டுமொத்த முறைமையினையும் பாதிக்ககூடிய  இடர்நேர்வினை கையாளுகின்ற பேரண்ட முன்மதியுடைய கொள்கைகளுக்கான தேவையானது உலகளாவிய நிதியியல் நெருக்கடியிலிருந்து கற்றுக்கொண்ட பாடமொன்றாக பரந்தளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 

பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்பானது ஓட்டுமொத்த முறைமையினையும் பாதிக்ககூடிய  இடர்நேர்வு மற்றும் தாக்குப்பிடிக்கும்தன்மை என்பவற்றைக் கண்காணித்தல், நிதியியல் முறைமையில் தோற்றம்பெறுகின்ற இடர்நேர்வுகளை இனங்காணுதல் மற்றும் அத்தகைய இடர்நேர்வுகளின் செயல்வடிவத்தினைத் தணிப்பதற்கான உரியகால கொள்கை நடவடிக்கைகளை எடுத்தல் என்பவற்றை ஈடுபடுத்துகின்றது. இதன்விளைவாக, அவை முறைமைசார்ந்த இடர்நேர்வினைத் தணித்து நிதியியல் முறைமையின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை மேம்படுத்துகின்றது. 

2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் பிரகாரம் பேரண்ட முன்மதியுடைய அதிகாரியாக மத்திய வங்கி பதவிகுறிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களம் இப்பொறுப்பாணையைத் தொழிற்படுத்துகின்றது. தனிப்பட்ட நிறுவன மட்டத்திலான மேற்பார்வையினைத் தாண்டிச்செல்கின்ற அனைத்தையுமுள்ளடக்கிய பேரண்ட முன்மதியுடைய அணுகுமுறை மத்திய வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தல் மேற்பார்வைக்கு வெளியில் நிதியியல் துறை பங்கேற்பாளர்கள் வரை நீடிக்கின்றது. 

பேரண்ட முன்மதியுடைய கொள்கையின் முக்கிய உள்ளகப் பங்குதாரர்கள் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டுக் குழுவினை உருவாக்குகின்றனர். எமது கொள்கை நடைமுறைப்படுத்தலுக்கு ஏதுவாக விளங்குகின்ற ஒழுங்குமுறைப்படுத்தலுக்கிடையிலான மன்றமே நிதியியல் முறைமை மேற்பார்வைக் குழுவாகும். நிதியியல் முறைமை மேற்பார்வைக் குழுவின் ஏனைய உறுப்பினர்கள் நிதி அமைச்சு, காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு என்பவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 

நடுத்தரகாலத்தில் நாம் அடைவதற்கு எதிர்பார்க்கின்றவை பற்றி எமது பங்குதாரர்கள் நன்கு அறிந்திருப்பதைப் பேணுவதற்கான கருவிகளாக பேரண்ட முன்மதியுடைய கண்காணிப்புத் திணைக்களம் பல்வேறு பேரண்ட முன்மதியுடைய கருவிகளை உருவாக்கி மீளாய்வதுடன் விளக்கக் குறிப்புக்களையும் வெளியிடுகின்றது. காலாண்டு நிதியியல் ஆற்றல்வாய்ந்த தன்மைக் குறிகாட்டிகள் இவ்வலைத்தளத்தில் கிடைக்கப்பெறுகின்றன. வங்கிகள் மற்றும் நிதிக் கம்பனிகளிலுள்ள போக்குகளை இனங்காண்பதற்கு எமது பகுப்பாராட்சிகளில் பயன்படுத்தப்படுகின்ற முக்கிய விகிதங்கள் மற்றும் நிதியியல் நிலைமைகளை அவை உள்ளடக்குகின்றன. 

ஆண்டுதோறும் நிதியியல் முறைமையில் முக்கிய அபிவிருத்திகள், பரிணமிக்கின்ற இடர்நேர்வுகள் மற்றும் இடர்நேர்வு தணிப்பு வழிமுறைகள் என்பவற்றை சாராம்சப்படுத்தி நிதியியல் உறுதிப்பாட்டு மீளாய்வினை வெளியிடுகின்றோம். 2023ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி இவ்வெளியீடு ஆளுநர் மூலம் சந்தைக்கு தொடங்கிவைக்கப்படும்.