சட்டங்களும் ஒழுங்கு விதிகளும்
1. 1949ஆம் ஆண்டின் 58ஆம் இலக்க நாணயச் சட்ட விதி
இலங்கையில் நாணய முறைமையை ஏற்படுத்துவதற்கும் அம் முறையை நிருவகித்து ஒழுங்கு முறைப்படுத்துவதற்கும் மத்திய வங்கியையும் நிறுவுவதற்கும் அத்தகைய நிருவாகம் மற்றும் ஒழுங்கு விதிகளின் நோக்த்திற்குத் தேவையான அதிகாரங்கள் தொழிற்பாடுகள் மற்றும் பொறுப்புக்களை மத்திய வங்கியின் நாணயச் சபைக்கு வழங்கி விதிப்பதற்கும் அதனுடன் தொடHபான விடயங்களை வழங்குவதற்குமானதொரு சட்டம்.
2. 2005ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க கொடுப்பனவு தீர்ப்பனவு முறைமைச் சட்டம்
கொடுப்பனவு தீர்ப்பனவு மற்றும் கொடுத்துத் தீர்த்தல் முறைமைகள்; மத்திய வங்கி ஏடுகளில் பிணையங்களை வைப்புச் செய்வதற்கான பணம் தொடர்பான பணிகளை வழங்குவோருக்கான ஒழுங்கு விதிகள்; காசோலைகளை இலத்திரனியல் முறையில் சமர்ப்பித்தல்; மற்றும் அவற்றுடன் தொடர்பான அல்லது எதிர்பாராமல் நிகழ்வனவுடன் தொடர்பான விடயங்கள் என்பவற்றின்கானதொரு சட்டம்