விஷ் கோவிந்தசாமி

திரு விஷ்கோவிந்தசாமி வியாபார நிருவாகத்தில் முதுமானிப் பட்டத்தினையும் ஐக்கிய அமெரிக்காவின் ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்திலிருந்து இலத்திரனியல் பொறியியலில் விஞ்ஞான இளமானிப் பட்டத்தினையும் பெற்றிருக்கின்றார். 26 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமைப் பதவியிலிருக்கும் திரு. கோவிந்தசாமி பன்முகப்படுத்தப்பட்ட பல்லினப் பெருநிறுவனமான சன்சயின் ஹோல்டிங் பிஎல்சியின்  குழும முகாமைத்துவப் பணிப்பாளராக இருந்து வருகின்றார். இந்நிறுவனம் இலங்கையின் பட்டியலிடப்பட்ட முதல் 50 நிறுவனங்களில் ஒன்றாத் திகழ்கிறது. அவர் இலங்கையின் சான்றழிக்கப்பட்ட தொழில்சார் முகாமையாளர்கள் நிறுவகத்தின் உறுப்பினராக இருப்பதுடன் உடனடியாக முற்போந்த இலங்கை வர்த்தக சம்மேளனத்தினதும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்தினதும் தலைவராவர்.

சன்சைன் ஹோல்டிங்ஸ்சின் தற்போதைய பதவிக்கு முன்னர் திரு. கோவிந்தசாமி இந்தியாவின் டாட்டா நிறுவனத்துடன் பங்குடமையினைக் கொண்டுள்ள பன்முகப்படுத்தப்பட்ட பெருந்தோட்ட முகாமைத்துவக் கம்பனியான வட்டவல பிளான்டேசனின் முதன்மை நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்திருக்கின்றார். வட்டவளையில், அரசிற்குச் சொந்தமான பெருந்தோட்டக் கம்பனியொன்றினை தனியார் மயப்படுத்திய பின்னர் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்படும் விதத்தில் உயர்ந்த மூலதன மயப்படுத்தப்பட்ட பிராந்திய பெருந்தோட்டக் கம்பனியாக வெற்றிகரமாக மாற்றியமைத்ததில் அவர் ஆற்றிய செயற்றிறன்மிக்க வகிபாகம் அவருக்கு பெருமளவு நன்மதிப்பினைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. இன்றைய நாளில் இலங்கையின் முன்னணி தேயிலை வர்த்தக நாமங்களாக விளங்கும் செஸ்ரா, வட்டவளை மற்றும் ரண்ஹட்ட ஆகிய வர்த்தக நாமங்களை உருவாக்கிய பெருமையும் அவரையே சேரும். இந்தியாவின் ஹவுஸ் ஒவ் டாட்டா நிறுவனம் இலங்கையிலுள்ள அவர்களது அநேக கம்பனிகளின் சபைகளில் திரு. கோவிந்தசாமியை நியமித்திருக்கிறது.