மணில் ஜயசிங்க 

திரு. மணில் ஜயசிங்க இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் உறுப்பினரும் முகாமைத்துவக் கணக்காளர் பட்டய நிறுவகத்தின் (ஐ.சி) உறுப்பினரும் இலங்கை சான்றுபடுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளரின் உறுப்பினரும் அரச நிதி மற்றும் கணக்கீட்டு பட்டய நிறுவகத்தின் உறுப்பினருமாவார். 

ஏனஸ்ட் அன்ட் யங் நிறுவனத்தில் தனது பதவியை ஆரம்பித்த திரு. ஜயசிங்க தயாரிப்பு, சில்லறை, விருந்தோம்பல், மொத்த விற்பனை வியாபாரம் மற்றும் தொலைத்தொடர்பூட்டல் உட்பட பல்வேறு துறைகளில் பரந்த அனுபவத்தினைப் பெற்றவர். ஏனஸ்ட் அன்ட் யங் நிறுவனத்தில் 30 ஆண்டுகளாகப் பங்காளர் என்ற இயலாற்றலைப் பெற்றிருந்த இவர் 2021 – 2023 இலிருந்து இலங்கை மற்றும் மாலைதீவின் ஏனஸ்ட் அன்ட் யங்கின் நாட்டிற்கான முகாமைத்துவப் பங்காளராகவும் 2003 – 2023 வரை இலங்கையில் அஷ்ரன்சின் பிறக்டீஸ் இன் தலைவராகவும் இலங்கை புறவஷன் பிறக்டீஸ் பணிப்பாளராகவும் இருந்திருக்கிறார். நிதியியல் நிறுவனங்களுக்கான உபாயத் திட்டங்களின் வியாபார மற்றும் அபிவிருத்திப் பெறுமானங்களில் அவர் பெற்றிருந்த விசேடத்துவம் நிதியியல் சேவைகளில் முக்கிய வளவாளராக திரு. ஜயசிங்க அவர்களை உருவாக்கியிருக்கிறது. அவர் பன்னாட்டு நிதியியல் அறிக்கையிடல் நியமம்/ இலங்கை கணக்கீட்டு நியமத்தின் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். 

அவரது பதவி, ஆலோசனை மற்றும் கைத்தொழில் அனுபவங்களில் 41 ஆண்டுகளுக்கு மேலாக பரந்து விரிந்து காணப்படுகிறது. இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் தலைவராகவும் முகாமைத்துவ கணக்காளர் பட்டய நிறுவகத்தின் இலங்கைச் சபையின் உறுப்பினராகவும் மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் இருந்ததுடன் பன்னாட்டுக் கணக்காளர் சம்மேளனத்தின் பன்னாட்டு கணக்கீட்டு கல்விச் சபையின் உறுப்பினரும் இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபையின் உறுப்பினரும் இலங்கை சான்றுபடுத்தப்பட்ட முகாமைத்துவக் கணக்காளர் பேரவையின் உறுப்பினரும் மத்திய வங்கியின் கணக்காய்வாளர் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும் பிஎல்சி மற்றும் வங்கிகளின் கணக்காய்வுக் குழுவின் மதியுரையாளரும் இலங்கை தேசிய வர்த்தகச் சம்மேளனத்தின் உறுப்பினருமாவார். 

தற்பொழுது, அவர் நியதிக் கணக்கீட்டு நியமங்கள் குழுவின் தலைவராகவும் நியதிக் கணக்காய்வு நியமங்கள் குழுவின் உறுப்பினராகவும் இருந்து வருவதுடன் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவகத்தின் மற்றைய அநேக குழுக்களிலும் பணியாற்றுகின்றார். அவர் நிதியியல் அறிக்கையிடல் நியமங்கள் நடைமுறைப்படுத்தல் மற்றும் பொருள்கோடல் குழுவினது உறுப்பினராகவும் கணக்காளர்களின் தென்னாசிய சம்மேளனத்தின் கணக்கீட்டுக் குழுவின் தலைவராகவும் இலங்கை கணக்கீடு மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்புச் சபையின் உறுப்பினராகவும் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவகத்தினது கணக்காய்வுக் குழுவின் உறுப்பினராகவும் இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் இலங்கை முதலீட்டுச் சபையின் உறுப்பினராகவும் இருப்பதுடன் டிமோ, சிலோன் கொஸ்பிட்டல்ஸ், சி. டபிள்யு. மக்சி பிஎல்சி மற்றும் சாஹாசிய இன்வெஸ்ட்மென்ஸ் லிமிடெட் இன் சுயாதீனப் பணிப்பாளருமாவார்.