முனைவர். ரவி ரத்நாயக்க

ஐக்கிய நாடுகள் சபையின் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான முன்னாள் முதன்மை பொருளியலாளரும் ஆசிய பசுபிக்கிற்கான ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக ஆணைக்குழுவில் வர்த்தகம் மற்றும் முதலீட்டின் (UNESCAP) பணிப்பாளருமான முனைவர். ரவி ரத்நாயக்க பிராந்திய ஒத்துழைப்பு முயற்சிகளில் அழியாத தடத்தைப் பதித்துள்ளார். முனைவர். ரத்நாயக்க> ஐக்கிய நாடுகள் சபையில் பதவி வகித்த காலத்தில்> வர்த்தகத்திற்கான ஆசிய பசுபிக் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி வலையமைப்பு (ARTNeT)> ஆசிய பசுபிக் தொழில் மன்றம் (APBF) > ஆசிய பசுபிக் நிலைபெறத்தக்க அபிவிருத்தி வலையமைப்பு> காகிதங்களற்ற வர்த்தகம் தொடர்பில் நிபுணர்கள் ஆசிய பசுபிக் வலையமைப்பு (NExT) உள்ளடங்கலாக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்ததுடன் உறுப்பு நாடுகளுக்கிடையில் ஆசிய பசுபிக் வர்த்தகம் மற்றும் உடன்படிக்கைக்கு புத்துயிரளிப்பதில் முக்கிய பங்காற்றினார். மிலேனியம் அபிவிருத்தி இலக்குகள்> நிறுவன சமூக பொறுப்பு> நிலைபெறத்தக்க அபிவிருத்தி> வர்த்தகம்> முதலீடு> அத்துடன் சிறிய மற்றும் நடுத்தரளவிலான தொழில்முயற்சிகள் போன்ற பல்வகை விடயங்கள் தொடர்பில் பல எண்ணிக்கையிலான வெளியீடுகள் மற்றும் கருத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து மேற்பார்வைசெய்துள்ளார். உலக வங்கி> ஆசிய அபிவிருத்தி வங்கி> ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்> பன்னாட்டு அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவராண்மை அத்துடன் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு போன்ற நன்மதிப்புபெற்ற நிறுவனங்களுக்கு முனைவர். ரத்நாயக்க ஆலோசனைப் பணிகளை வழங்கியமையால்> அவரது நிபுணத்துவம் ஐக்கிய நாடுகளுக்கு அப்பாலும் விரிவடைந்திருந்தது. மேலும்> 2016 தொடக்கம் 2018 வரை> இலங்கை உட்பட பல்வேறு அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு ஆலோசகராகவும் அவர் பணியாற்றினார்.

குறிப்பாக> பிரிஜிங் த கெப் பவுன்டே~னின் (Bridging the Gap Foundation) செயலாளர் நாயகமாக> முனைவர். ரத்நாயக்க இலங்கை சிறுவர்களுக்கான கல்விசார் வாய்ப்புக்களை மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு> பல்வேறு நிறுவன சமூக பொறுப்பு கருத்திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளார்.

1980களின் தொடக்கத்தில்> ஐக்கிய நாடுகளில் அவரது தொழில் வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்னர்> முனைவர். ரத்நாயக்க இலங்கையில் நிதி> திட்டமிடல் அமைச்சில் பதவியை வகித்தார். இக்காலப்பகுதியில்> அவர் தீர்வைகள் மற்றும் வர்த்தகம் தொடர்பில் சனாதிபதி ஆணைக்குழுவின் ஆராய்ச்சி பணிப்பாளராக பணியாற்றினார். மேலும்> தனது கல்வி பயணத்தின் போது 1991 தொடக்கம் 1999 வரையான காலப்பகுதியில்> நியூசிலாந்தின் ஒக்லான்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் மூத்த விரிவுரையாளராகவும் தென்கொரியாவிலுள்ள கொரிய பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராகவும் கடமையாற்றினார்.

பொருளாதாரத்தில் பல முதுமானி மற்றும் முனைவர் பட்ட ஆய்வுகட்டுரைகள் தொடர்பில் முனைவர். ரத்நாயக்க மேற்கொண்ட மேற்பார்வைகள் கல்வி துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்களுக்கு சான்றுபகர்கின்றன. பொருளாதார நிபுணராக நான்கு தசாப்தங்களுக்கு மேலான அனுபவத்துடன்> முனைவர். ரத்நாயக்க அவரது நடைமுறை மற்றும் கல்விசார் நிபுணத்துவம் பேரண்டபொருளாதாரங்களிலும் பன்னாட்டு பொருளாதாரங்களிலும் ஆதிக்கம்செலுத்துகின்றது. பல்வேறு வெளியீடுகளை தயாரிப்பதற்கு வழிகாட்டியதற்கு புறம்பாக> அவரது புலமைசார்ந்த பங்களிப்புக்கள் 60இற்கும் மேற்பட்ட வெளியிடப்படவிருக்கும் சஞ்சிகை கட்டுரைகள்> நூல்கள் மற்றும் வெளியிடப்படவிருக்கும் கட்டுரைகள் போன்றவற்றை உள்ளடக்கியிருந்தது. மேலும்> இவர் அமெரிக்க பொருளாதார அமைப்பு உள்ளடங்கலாக பல்வேறு தொழில்சார் அமைப்புக்களில் ஊக்கத்துடன் பங்கேற்றிருந்தார்.