அனுஷ்க எஸ். விஜேசிங்க

திரு. அனுஷ்க எஸ். விஜேசிங்க அரசாங்கம், தனியார் துறை ஆய்வு நிறுவனங்களில் அனுபவம் நிரம்பிய பொருளியலாளராவர். அவர் அரச கொள்கை நிறுவகத்தினதும் திறன் எதிர்காலத்திற்கான மையத்தினதும் இணை நிறுவனராக பணிப்பாளராக இருக்கின்றார். திரு. விஜேசிங்க மொங்கோலியா, பாகிஸ்தான், மியன்மார், மாலைதீவுகள் மற்றும் ஈரான் நாடுகளிலுள்ள ஆலோசனைச் செயற்றிட்டங்களுக்கான பன்னாட்டு ஆலோசனையாளராகவும் இருக்கின்றார். இந்நியமனம் வரை திரு. விஜேசிங்க செலான் வங்கி பிஎல்சி மற்றும் அட்டன் நஷனல் வங்கி பினான்ஸ் பிஎல்சி என்பனவற்றில் மூத்த சுயாதீனமான நிறைவேற்று அல்லாத பணிப்பாளராக இருந்திருக்கின்றார். அவர் வெயர்வெஸ்ட் இன்சூரன்ஸ் லிமிடெட் மற்றும் குட் லைவ் ஓ (பிறைவேற்) லிமிடெட் சபையில் தொடர்ந்தும் இருந்துவருவதுடன் திரு. விஜேசிங்க தேசிய புத்தாக்க முகவர் சபை மற்றும் சனாதிபதி செயலகத்திலுள்ள ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் ஏற்றுமதி மீதான மேற்பார்வைக் குழு மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பனவற்றிலும் பணியாற்றியிருக்கின்றார். அவரது முன்னைய வகிபாகங்களைப் பொறுத்தவரை, அவர் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முதன்மைப் பொருளியலாளராகவும் இலங்கை கொள்கை ஆய்வு நிறுவகத்தின் ஆராய்ச்சிப் பொருளியலாளராகவும் அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் பன்னாட்டு வர்த்தக அமைச்சின் மதியுரையாளராகவும் இருந்திருக்கின்றார். திரு. விஜேசிங்க உலக பொருளாதார மன்றத்தின் புத்தாக்கச் சூழலியல் முறைமையின் மீதான உலகளாவிய எதிர்காலச் சபையின் உறுப்பினராகவும் சிலோனிலுள்ள கொரிய அபிவிருத்தி நிறுவகத்திலுள்ள ஆசிய அபிவிருத்தி நிறுவகத்தின் உறுப்பினராகவும் இருந்திருக்கின்றார். திரு. விஜேசிங்க லீட்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளாதாரத்தில் முதுமானிப்பட்டத்தினையும் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியிலிருந்து பொருளாதாரத்தில் இளமானிப் பட்டத்தினையும் பெற்றிருப்பதுடன் ஹாவார்ட் கென்னடி ஸ்கூலின் “முன்னணி பொருளாதார வளர்ச்சி” நிறைவேற்று நிகழ்ச்சித்திட்டத்தின் பழைய மாணவருமாவார்.