லங்காசெக்குயர் பணிகள்

திறைசேரி உண்டியல்களிலும் திறைசேரி முறிகளிலும் பிணையமளிக்கப்பட்ட முதலீடுகளை வசதியளிப்பதற்காக லங்காசெக்குயர் பின்வரும் பணிகளை இலவசமாக வழங்குகின்றது.

 

லங்காசெக்குயர் இலத்திரனியல் கூற்றுக்கள்

பௌதீக கூற்றுக்களுக்குப் பதிலாக இலத்திரனியல் கூற்றுக்களாக மின்னஞ்சலூடாக லங்காசெக்குயரின் காலாந்தர இலத்திரனியல் கூற்றுக்களுக்கு வசதியளிக்கின்றது.

புதிய இயல்பு வாழ்க்கை முறையில் காகிதங்களை பயன்படுத்தாத டிஜிட்டல் தொடர்புகளுக்கு சூழல் நட்புமிக்கதும் செலவுச் சிக்கனமானதுமான முயற்சியை முன்னெடுத்தல்.

அதற்கமைய, அனைத்து லங்காசெக்குயா் கூற்றுக்களும்  2024.04.01 தொடக்கம் இலத்திரனியல் கூற்றுக்களாக வழங்கப்படும் என்பதுடன் அச்சிடப்பட்ட கூற்றுக்களை வழங்குவது நிறுத்தப்படும்.

மேலதிக விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

 

அதேநேர குறுஞ்செய்திச் சேவை  மற்றும்  மின்னஞ்சல் அறிவித்தல்கள்

பிணையங்கள் கணக்குகளிலுள்ள அரச பிணையங்களின் அசைவுகள் (வரவுகள்/பற்றுக்கள்) பற்றிய உடனடியான/அதேநேர விழிப்பூட்டல்களை லங்காசெக்குயரில் பதிவுசெய்யப்பட்ட செல்லிடத்தொலைபேசி இலக்கம்/மின்னஞ்சல் முகவரிக்கு குறுஞ்செய்திச்சேவையூடாக அல்லது மின்னஞ்சலூடாக பெற்றுக்கொள்வதற்கு வசதியளிக்கின்றது.

செல்லுபடியாகும் செல்லிடத் தொலைபேசி இலக்கமொன்றை/மின்னஞ்சல் முகவரியொன்றை தொடர்புடைய கட்டுக்காவல் நிறுவனத்திற்கு (உரிமம்பெற்ற வங்கி முதனிலை வணிகர்) வழங்குவதன் மூலம் அதேநேர விழிப்பூட்டல்களுக்குப் பதிவுசெய்து அரச பிணையங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் தொடர்பில் அறிந்திருங்கள்.

என அனைத்து முதலீட்டாளர்களும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

 

லங்காசெக்குயர்நெட் வசதி

மத்திய வைப்பக முறைமையிலுள்ள அனைத்து பிணையங்கள் கணக்குகளையும் இணையதளத்தை அடிப்படையாகக்கொண்டு நிகழ்நிலையில் பார்வையிடுவதற்கு வசதியளிக்கின்றது. முதலீட்டாளர்கள் தமது பிணையங்கள் கணக்குகளில் ஏற்படும் கொடுக்கல்வாங்கல் விபரங்கள், கொடுப்பனவு விபரங்கள் அத்துடன் நிலுவை மீதிகள் என்பவற்றை எங்கிருந்தும் எந்நேரத்திலும் (24*7) பார்வையிட முடியும்.

இவ்வசதியைப் பதிவுசெய்வதற்கு, உரியவாறு பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்புடைய கட்டுக்காவல் நிறுவனத்திடம் கையளிக்கப்பட வேண்டும்.

லங்காசெக்குயர் வசதியின் விண்ணப்பங்களுக்கும் மேலதிக விபரங்களுக்கும் இங்கே அழுத்தவும்.

 

திறைசேரி உண்டியல்களினதும் முறிகளினதும் நிலுவையை உறுதிப்படுத்தல்

வருடாந்த அல்லது காலாந்தரக் கணக்காய்வுகள், வீசா விண்ணப்பங்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடு சமர்ப்பிப்புக்கள் என்பவற்றிற்காக லங்காசெக்குயர் கணக்குகளின் மூலமான பிணையங்கள் கணக்குகளிலுள்ள நிலுவை மீதிகளின் கூற்றுக்களை முறையான கோரிக்கையொன்றின்பேரில் பெற்றுக்கொள்வதற்கு வசதியளிக்கின்றது.

மேற்குறிப்பிட்ட நோக்கங்களுக்காக கூற்றுக்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகின்ற முதலீட்டாளர்கள் lankasecureservices@cbsl.lk எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய கோரிக்கைகளை அனுப்பிவைக்க முடியும்.

கோரிக்கை படிவங்களுக்காக கீழேயுள்ள இணைப்புக்களை அழுத்தவும் (ஏற்புடையவாறு).

தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கான கோரிக்கை படிவம்

கம்பனி முதலீட்டாளர்களுக்கான கோரிக்கை படிவம்