மத்திய வங்கி 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகளுடன் இசைந்து செல்லும் விதத்தில் 2025இற்கான அதன் முதலாவது நாணயக் கொள்கை அறிக்கையினை வெளியிட்டது. நாணயக் கொள்கை அறிக்கையானது ஆண்டொன்றிற்கு இருமுறை வெளியிடப்படுகின்றது. மேலும், தற்போதைய அறிக்கையின் உள்ளடக்கமானது 2025 சனவரி மீளாய்வின் போது நாணயக் கொள்கைத் தீர்மானத்தினை உருவாக்குவதில் மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் பரிசீலனையிற்கொள்ளப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.