இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – கட்டடவாக்கம் 2025 திசெம்பரில் அதிகரித்துள்ளது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 திசெம்பரில் 67.1 ஆக அதிகரித்தது. பாதகமான காலநிலை நிலைமைகளினால் ஏற்பட்ட ஆரம்ப தொழிற்பாடு சார்ந்த இடையூறுகளுக்கு மத்தியில் தொடர்புடைய காலப்பகுதியில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க விரிவடைதலை பெரும்பாண்மையான நிறுவனங்கள் அறிக்கையிட்டன.

புதிய கட்டளைகள் சுட்டெண், திசெம்பரில் விரிவடைந்து காணப்பட்டது. அரசாங்க நிதியளிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிக் கருத்திட்டங்கள் மற்றும் புதிய தனியார் துறை அபிவிருத்திகள் இரண்டிலும் அதிகரிப்பினால் தூண்டப்பட்டு இம்மாதத்தில் கிடைக்கப்பெறுகின்ற கருத்திட்டங்களில் அதிகரிப்பினை பல நிறுவனங்கள் அறிக்கையிட்டன. அதேவேளை, மாதகாலப்பகுதியில் தொழில்நிலைச் சுட்டெண், நடுநிலையான மட்டத்தில் காணப்பட்டு நிலையான தொழில்நிலைமைகளை பிரதிபலித்தது. கொள்வனவுகளின் அளவுச் சுட்டெண் தொடர்ந்தும் விரிவடைந்த அதேவேளை நிரம்பலர்களின் விநியோக நேரம் மாதகாலப்பகுதியில் நீடித்துக் காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Friday, January 30, 2026