கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2026 சனவரியில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2026 சனவரியில் 56.1 சுட்டெண் பெறுமதியொன்றைப் பதிவுசெய்தது. தயாரிப்பு நடவடிக்கைகளில் 2025 திசெம்பரில் காணப்பட்ட பருவகால ரீதியிலான உச்சத்துடன் ஒப்பிடுகையில் மெதுவான வீதமொன்றில் மாதத்திற்கு மாத விரிவாக்கமொன்றை இது பிரதிபலிக்கின்றது. மாதகாலப்பகுதியில் அனைத்து துணைச் சுட்டெண்களும் நடுநிலையான அடிப்படை அளவிற்கு மேல் காணப்பட்டன.
பணிகளுக்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – பணிகள்), 2026 சனவரியில் 64.5 சுட்டெண் பெறுமதியொன்றைப் பதிவுசெய்து, கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் பணிகள் நடவடிக்கைகளில் மெதுவான விரிவடைதலொன்றை எடுத்துக்காட்டியது.








