இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – கட்டடவாக்கம் 2026 சனவரியில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது

கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2026 சனவரியில் 75.0 கொண்ட சுட்டெண் பெறுமதியினை அடைந்து 2020 யூலையில் 75.7 கொண்ட உச்சத்தின் பின்னர் அதன் இரண்டாவது அதிகூடிய வாசிப்பினை பதிவுசெய்தது. புதிய ஆண்டில் புதிய கருத்திட்டங்கள் தொடங்கப்பட்டமை அத்துடன் திசெம்பரில் எதிர்கொண்ட காலநிலை தொடர்புபட்ட இடையூறுகள் தளர்வடைந்தமை மூலம் தூண்டப்பட்டு மாதகாலப்பகுதியில் அதிகரித்த கருத்திட்ட நடவடிக்கைகளை அநேகமான நிறுவனங்கள் அறிக்கையிட்டன.

அநேகமான கட்டடவாகத் துறைகளுக்கிடையில் அதிகரித்த கருத்திட்டம் கிடைக்கப்பெறுகின்றமை மூலம் தூண்டப்பட்டு புதிய கட்டளைகள் சுட்டெண் சனவரியில் உயர்வடைந்தது. அதேவேளை தொழில்நிலைச் சுட்டெண்ணும் முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் விரிவடைந்து உயர்வான ஆட்சேர்ப்பு மட்டங்களைப் பிரதிபலிக்கின்றன. எனினும், பல்வேறு தேர்ச்சிபெற்ற தொழில்சார் வகைகளுக்கு ஊழியர்களைச் சேர்த்துக்கொள்வதில் தொடர்ச்சியான இன்னல்களை பல நிறுவனங்கள் வலியுறுத்தின. திட்டமிடப்பட்ட கருத்திட்டங்களுக்கான கையிறுப்புக்களை நிறுவனங்கள் தொடர்ந்தும் அதிகரித்தமையினால் கொள்வனவுகளின் அளவுச் சுட்டெண் சனவரியில் மேலும் அதிகரித்தது. அதேவேளை, நிரம்பலர்களின் விநியோக நேரச் சுட்டெண் மாதகாலப்பகுதியில் நீட்சியடைந்து காணப்பட்டது.

முழுவடிவம்

Published Date: 

Friday, February 27, 2026