Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி ஓரிரவு கொள்கை வீதத்தினை மாற்றமின்றிப் பேணுகின்றது

நாணயக் கொள்கைச் சபையானது நேற்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தினை 8.00 சதவீதத்தில் பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகளைக் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. நிலவுகின்ற நாணயக் கொள்கை நிலைமையானது, பணவீக்கம் 5 சதவீத இலக்கினை நோக்கி நகருவதனை நிச்சயப்படுத்தும் வேளையில் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் ஆதரவளிக்குமெனச் சபை நம்பிக்கை கொண்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் தொடர்பில் பொது மக்களுக்கான அறிவித்தல்

Pro Care (Pvt) Ltd., Shade of Procare (Pvt) Ltd, திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளது என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.

டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் மூலம் எதிர்காலத்தை வடிவமைப்போம்: நுவரெலிய மாவட்டத்தில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை இலங்கை மத்திய வங்கி ஊக்குவிக்கின்றது

இலங்கை மத்திய வங்கி அதன் 2025ஆம் ஆண்டிற்கான மற்றுமொரு டிஜிட்டல் கொடுப்பனவுகள் ஊக்குவிப்பு பிரச்சாரத்தை நுவரெலியாவில் 2025 மாச்சு 22 மற்றும் 23ஆம் திகதிகளில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர். முனைவர். நந்தலால் வீரசிங்க அவர்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கின்றது.

இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2025 பெப்புருவரி

கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்கள், 2025 பெப்புருவரியில் தயாரிப்பு மற்றும் பணிகள் நடவடிக்கைகள் இரண்டிலும் விரிவடைதல்களை எடுத்துக்காட்டுகின்றன.
 
தயாரிப்பிற்கான இலங்கைக் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு – தயாரிப்பு), 2025 பெப்புருவரியில் 56.8 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்து, தயாரிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் விரிவடைவதனை எடுத்துக்காட்டுகின்றது. இவ்விரிவடைதலுக்கு அனைத்து துணைச் சுட்டெண்களும் சாதகமாகப் பங்களித்தன.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மூலம் மோசடியாக உருவாக்கப்படும் காணொளிகள் பற்றி அவதானமாக இருங்கள்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு மூலம் மோசடியாக உருவாக்கப்படும் காணொளிகள் சமூக வலைத்தளங்கள் மீது, குறிப்பாக முகநூலில் தற்போது பரப்பப்படுகின்றது பற்றி பொதுமக்கள் அவதானமாக இருக்கும்படி இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவுறுத்துகின்றது. நம்பமுடியாத நிதியியல் ஆதாயங்களுக்கு வாக்குறுதியளிக்கின்ற முதலீட்டுத் திட்டங்களை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பரிந்துரைக்கின்றவாறு இக்காணொளிகள் பொய்யாகச் சித்திரிக்கின்றன. அறியாமலிருக்கின்ற தனிநபர்களை மோசடிக்குள்ளாக்குகின்ற நோக்கத்தினைக் கொண்டு இக்காணொளிகளைக் காண்பவர்களை சந்தேகத்திற்கிடமான வெளிவாரி இணைப்பொன்றிற்கும் இவை தொடர்புபடுத்துகின்றன.

வெளிநாட்டுச் செலாவணி பொருந்தச்செய்தல் தளத்தை இலங்கை வெளிநாட்டுச் செலாவணிச் சந்தை அறிமுகப்படுத்துகின்றது

விரிவான வெளிநாட்டுச் செலாவணி சந்தையொன்றின் வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்கான இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்பிற்கமைவாக, வெளிநாட்டுச் செலாவணி பொருந்தச்செய்தல் தளமொன்றை இலங்கை வெளிநாட்டுச் செலாவணி சந்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. அனைத்து உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், தேசிய சேமிப்பு வங்கி, மற்றும் இலங்கை மத்திய வங்கி என்பனவற்றுக்கு அணுகுவழியினைக் கொண்டிருக்கும் இத்தளமானது விலை கண்டறிதலை மேம்படுத்துவதற்கும் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையில் அதிக வெளிப்படைத்தன்மையையும் வினைத்திறனையும் ஊக்குவிப்பதற்கும் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். அதற்கமைய, இந்நோக்கத்திற்காக, புளூம்பேர்க் BMatch வெளிநாட்டுச் செலாவணி பொருந்தச்செய்தல் தளம் உள்நாட்டு வெளிநாட்டுச் செலாவணி சந்தையினால் தெரிவுசெய்யப்பட்டது.

Pages

சந்தை அறிவிப்புகள்