கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (கொநுவிசு, 2021=100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கமானது (ஆண்டிற்கு ஆண்டு), தொடர்ச்சியாக எட்டு மாதங்களாக உயர்வடைந்ததன் பின்னர், முன்னைய மாதத்துடன் ஒப்பிடுகையில் 2025 நவெம்பரில் 2.1 சதவீதமாக மாற்றமின்றி காணப்பட்டது.
உணவுப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு), 2025 ஒத்தோபரில் பதிவாகிய 3.5 சதவீதத்திலிருந்து 2025 நவெம்பரில் 3.0 சதவீதத்திற்கு குறைவடைந்த அதேவேளை உணவல்லாப் பணவீக்கம் (ஆண்டிற்கு ஆண்டு) 2025 ஒத்தோபரில் பதிவாகிய 1.4 சதவீதத்திலிருந்து 2025 நவெம்பரில் 1.7 சதவீதமாக அதிகரித்தது.
Published Date:
Monday, December 1, 2025








