கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 ஒத்தோபரில் 64.3 கொண்ட பெறுமதியினைப் பதிவுசெய்தது. உயர்வான இந்த அளவீடு கடந்த மாதத்தின் உச்சநிலையைத் பின்பற்றிச்சென்று, கட்டுமான நடவடிக்கைகளுக்காக தொடர்ச்சியாக சாதகமான தோற்றப்பாடொன்றைக் குறித்துக்காட்டுகின்றது.
அரசாங்க நிதியளிக்கப்பட்ட கருத்திட்டங்களில் அதிகரிப்பொன்றை பல பதிலிறுப்பாளர்கள் தெரிவித்ததுடன் புதிய கட்டளைகள் சுட்டெண் ஒத்தோபரில் தொடர்ந்தும் அதிகரித்தது. கட்டுமான கருத்திட்டங்களின் நிலையான பாய்ச்சலால் ஆதரவளிக்கப்பட்டு, தொழில்நிலை மற்றும் கொள்வனவுகளின் அளவுச் சுட்டெண்களும் மாத காலப்பகுதியில் விரிவடைந்து, நிறுவனங்களின் தொடர்ச்சியான நம்பிக்கையைப் பிரதிபலித்தது. நிரம்பலர் விநியோக நேரம் இம்மாத காலப்பகுதியில் நீட்சியடைந்து காணப்பட்டது.








