அண்மைய புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் உரிமம்பெற்ற வங்கிகள் உதவுவதற்கான நிவாரண வழிமுறைகள்

அண்மைய புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு பேரனர்த்தங்களின் மோசமான விளைவுகளைக் கருத்திற்கொண்டும், வரையறுக்கப்பட்ட இலங்கை வங்கிகள் சங்கத்தின் (உத்தரவாதம்) முன்மொழிவுகளையும் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டிற்குப் பங்கமில்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்றிறன்மிக்க நிவாரணத்தை வழங்குவதற்கான தேவையினையும் முன்னிறுத்தி, வருமானம் அல்லது வியாபாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள (இதனகத்துப் பின்னர் கடன்பாட்டாளர்கள் எனக்குறிப்பீடு செய்யப்படும்) தனிப்பட்டவர்கள் மற்றும் வியாபாரங்களுக்கான நிவாரண வழிமுறைகளை வழங்குவதற்கு அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளுக்கும் 2025.12.05 அன்று திகதியிடப்பட்ட 2025ஆம் ஆண்டின் 04ஆம் இலக்கச் சுற்றறிக்கையினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டது. 

முழுவடிவம்

Published Date: 

Friday, December 5, 2025