இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு சனாதிபதி, 2025.10.02 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளும் சபையின் உறுப்பினரொருவராக திரு. மைத்திரி எவன் விக்ரமசிங்க, சனாதிபதி சட்டத்தரணி அவர்களை நியமித்துள்ளார். 2023ஆம் ஆண்டின் 16ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கியின் விவகாரங்களின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் பொதுவான கொள்கைகளின் நிர்ணயம் என்பவற்றை மேற்பார்வை செய்வதற்கு பொறுப்பான அமைப்பாக ஆளும் சபை தாபிக்கப்பட்டுள்ளது. மேலும், இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 12(1)(ஆ) பிரிவின் நியதிகளுக்கமைய ஆளும் சபை உறுப்பினர்கள் நாணயக் கொள்கைச் சபையின் உறுப்பினர்களாகவும் இருப்பர்.