கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு 2025 ஓகத்தில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் தொடர்ச்சியான விரிவாக்கமொன்றைக் காண்பித்து, 61.1 ஆக அதிகரித்தது. பதிலிறுப்பாளர்கள் குறிப்பிட்டதற்கமைய, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட சில கருத்திட்டங்கள் மீளத்தொடங்கப்பட்டதுடன் கருத்திட்டம் கிடைக்கப்பெறுவதில் தொடர்ச்சியான அதிகரிப்பு, கட்டுமானத் துறையின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.