பன்னாட்டு நாணய நிதியத்தின் அலுவலர்கள் இலங்கைக்கான விஜயத்தினை நிறைவுசெய்துள்ளனர்

இலங்கை அதிகாரிகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புக்களானவை சிறப்பாகச் செயலாற்றுகின்ற வளர்ச்சி, பணவீக்கம் இலக்கினை நோக்கி முன்னேற்றமடைதல், வெளிநாட்டு ஒதுக்குகளைத் திரட்டுதல் மற்றும் இறை வருவாய்கள் மேம்படுதல் என்பவற்றுடன் பயனளிக்கின்றன.

வர்த்தகக் கொள்கையின் நிச்சயமற்றதன்மை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றிற்கு மத்தியில் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டைப் பாதுகாப்பதற்கும் மீட்சியினை அடைவதற்கும் அதிர்வுகளுக்கான இலங்கையின் தாக்குப்பிடிக்கும் தன்மையைக் கட்டியெழுப்புவதற்கும் மறுசீரமைப்பு உத்வேகத்தை நிலைநாட்டுதல் இன்றியமையாததாகும்.

பன்னாட்டு நாணய நிதியத்தினால் ஆதரவளிக்கப்படுகின்ற நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முக்கிய கடமைப்பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் காணப்படுகின்ற முன்னேற்றமானது விரிவாக்கப்பட்ட நிதிய வசதி ஏற்பாட்டின் ஐந்தாவது மீளாய்வின் பின்னணியில் முறையாக மதிப்பிடப்படும்.

முழுவடிவம்

Published Date: 

Friday, July 25, 2025