பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையானது துரித நிதியளிப்புச் சாதனத்தின் கீழ் அவசரகால நிதியளிப்பிற்கு ஒப்புதலளித்து, பேரழிவுமிக்க டித்வா புயலிலிருந்து எழுகின்ற அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும் பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினைப் பாதுகாப்பதற்கும் சிறப்பு எடுப்பனவு உரிமை 150.5 மில்லியனுக்கு (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 206 மில்லியன், ஒதுக்கீட்டின் 26 சதவீதத்திற்கு நிகராக) உடனடி அணுகலை வழங்கியுள்ளது. 2025 திசம்பர் 19 அன்று பன்னாட்டு நாணய நிதியம் பின்வரும் ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளது. பின்வரும் இணைப்பினூடாக அவ்வறிக்கையைப் பார்வையிடலாம்.
Published Date:
Friday, December 19, 2025








