நடைமுறைக் கணக்கானது முன்னைய இரண்டு மாதங்களில் பற்றாக்குறைகளைப் பதிவுசெய்ததன் பின்னர் 2025 நவெம்பரில் மிகையொன்றிற்குத் திரும்பலடைந்தது. நடைமுறைக் கணக்கு மிகையானது 2025 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் ஐ.அ.டொலர் 1,678 மில்லியனாகக் காணப்பட்டது.
வணிகப்பொருள் வர்த்தகப் பற்றாக்குறையானது 2025 நவெம்பரில் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் விரிவடைந்தது. மேலும், 2025 சனவரி தொடக்கம் நவெம்பர் வரையான காலப்பகுதியில் வர்த்தகப் பற்றாக்குறையானது ஐ.அ.டொலர் 6.9 பில்லியனிற்கு 2024இன் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் விரிவடைந்தது.
Published Date:
Wednesday, December 31, 2025








