இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் சேமலாபத் திணைக்களமானது, கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்றின் காரணமாக நாட்டில் நிலவிவருகின்ற கஷ்டமான நிலைமைக்கு மத்தியிலும் அதன் பணிகளை இடைத்தடங்கலின்றி வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் தொடர்பில் அதன் அனைத்து ஆர்வலர்களுக்கும் அறிவிக்கின்றது. மீளளிப்பு நிதியங்களைத் தீர்ப்பனவு செய்தல், பங்களிப்புச் சேகரித்தல், நிலுவை உறுதிப்படுத்தல்களை மற்றும் பங்களிப்பு வரலாற்று அறிக்கைகளை வழங்குதல் அத்துடன் பெயர் மற்றும் கணக்குத் திருத்தங்கள் போன்றன தொடர்புபட்ட பணிகள் பின்வருமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.