வெளிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2021 சனவரி

இலங்கையின் வெளிநாட்டுத் துறை 2021 சனவரி காலப்பகுதியில் பல்வேறு நோக்குகளில் தொடர்ந்தும் மீட்சியடைந்தது. மேம்பட்ட வர்த்தகப் பற்றாக்குறை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு என்பன இதற்குப் பிரதானமாக துணையளித்திருந்தன. 2020 சனவரியுடன் ஒப்பிடுகையில் 2021 சனவரியில் வர்த்தகக் கணக்கில் குறைவடைந்த பற்றாக்குறைக்கு வணிகப் பொருள் ஏற்றுமதிகளைவிட வணிகப் பொருள் இறக்குமதியில் பாரிய வீழ்ச்சியே காரணமாக அமைந்தது. அதேவேளை, தொழிலாளர் பணவனுப்பல்கள் 2021 சனவரியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியொன்றினைத் தொடர்ந்தும் பதிவுசெய்து வெளிநாட்டு நடைமுறைக் கணக்கினை வலுப்படுத்தியது. நிதியியல் கணக்கில் 2021 சனவரியில் அரசாங்கப் பிணையங்கள் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் சிறிய தேறிய உட்பாய்ச்சலொன்றினைப் பதிவுசெய்த அதேவேளை, கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை தேறிய வெளிப்பாய்ச்சல்களைப் பதிவுசெய்தன. ஆயினும், மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட வழிமுறைகளும் அத்தியாவசியமற்ற இறக்குமதிகள் மீதான அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் தொடர்ந்தமையும் இவ்வழுத்தத்தினை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவின.

முழு வடிவம்

Published Date: 

Thursday, March 11, 2021