முறிவடைந்த நிதிக் கம்பனிகளின் வைப்பாளர்களுக்கு அதிகரித்த நட்டஈட்டுக் கொடுப்பனவினைச் செலுத்துவதற்கு மத்திய வங்கி தொடங்குகின்றது

சென்றல் இன்வெஸ்மன்ட் அன்ட் பினான்ஸ் லிமிடெட், த ஸ்டான்டட் கிறடிற் பினான்ஸ் லிமிடெட், ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட், த பினான்ஸ் கம்பனி பிஎல்சி, ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சி ஆகியவற்றின் வைப்பாளர்களுக்குஃ தொடர்புடைய சட்ட பூர்வமான பயன்பெறுநர்களுக்கு இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை உதவித் திட்டத்தின் கீழ் ரூ.500,000 கொண்ட அதிகரிக்கப்பட்ட நட்டஈட்டுத் தொகையினை கொடுப்பனவு செய்வதனை இலங்கை மத்திய வங்கி தொடங்கியுள்ளது. 

அதற்கமைய, 2021.04.04ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் ஊடக அறிவித்தலில் குறித்துரைக்கப்பட்ட வேண்டப்பட்ட ஆவணங்களுடன் சேர்த்து சம்மதப் படிவங்கள் கிடைக்கப்பெற்றதன் மீது சென்றல் இன்வெஸ்மன்ட் அன்ட் பினான்ஸ் லிமிடெட், த ஸ்டான்டட் கிறடிற் பினான்ஸ் லிமிடெட் மற்றும் ரிகேஎஸ் பினான்ஸ் லிமிடெட்டின் வைப்பாளர்களுக்கு/ தொடர்புடைய சட்ட பூர்வமான பயன்பெறுநர்களுக்கு இலங்கை மத்திய வங்கியினால் நேரடியாகக் கொடுப்பனவு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. த பினான்ஸ் கம்பனி பிஎல்சி, ஈரிஐ பினான்ஸ் லிமிடெட் மற்றும் சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்பாளர்களுக்கு/ தொடர்புடைய சட்டபூர்வமான பயன்பெறுநர்களுக்கான நட்டஈடு, இந்நோக்கத்திற்கான இலங்கை மத்திய வங்கியினால் நியமிக்கப்பட்ட முகவர் வங்கியான மக்கள் வங்கியின் நாடு முழுவதுமுள்ள கிளை வலையப்பினூடாகக் கொடுப்பனவு செய்யப்படும். ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் வைப்பாளர்கள்/ தொடர்புடைய சட்டபூர்வமான பயன்பெறுநர்கள் தமது நட்டஈட்டினை மக்கள் வங்கியிலிருந்து 2021.04.09ஆம் திகதியிலிருந்து (நாளை) சேகரிக்கமுடியுமென்பதுடன் த பினான்ஸ் கம்பனி பிஎல்சியின் வைப்பாளர்கள்/ தொடர்புடைய சட்டபூர்வமான பயன்பெறுநர்கள் தமது நட்டஈட்டினை 2021.04.12 திகதி தொடக்கம் பெற்றுக்கொள்ள முடியும். சுவர்ணமஹால் பினான்ஸ்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்பாளர்களுக்கான/ தொடர்புடைய சட்டபூர்வமான பயன்பெறுநர்களுக்கான அதிகரிக்கப்பட்ட நட்டஈட்டுக் கொடுப்பனவு விரைவில் ஆரம்பிக்கப்படும். 

ஈரிஐ பினான்ஸ் லிமிடெட்டின் வைப்பாளர்களின்/ தொடர்புடைய சட்டபூர்வமான பயன்பெறுநர்களின் நன்மைக்காகவும் வசதிக்காகவும் மக்கள் வங்கி, நட்டஈட்டுக் கொடுப்பனவுகளுக்காக அதன் கிளைகளை 2021 ஏப்பிறல் 10ஆம் திகதியன்று (சனிக்கிழமை) மு.ப 9.00 மணியிலிருந்து பி.ப 2.00 மணிவரை திறப்பதற்கு உடன்பட்டுள்ளது. எனவே, தொடர்புடைய ஆவணங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் 2021.04.09/ 2021.04.12 தொடக்கம் ஏதேனும் மக்கள் வங்கிக் கிளையிலிருந்து தமது கோரிக்கைகளை சேகரிக்குமாறு தகைமையுடைய வைப்பாளர்களை/ தொடர்புடைய சட்டபூர்வமான பயன்பெறுநர்களை நாம் கோருகின்றோம். மக்கள் வங்கி வளாகத்தினுள் அதிகளவான மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து சுகாதார வழிகாட்டல்களுடன் இணங்கியொழுகவும்.

 

மேலதிகத் தகவல்களுக்கு,

பணிப்பாளர்,

தீர்மானங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தல் திணைக்களம்

இலங்கை மத்திய வங்கி, கொழும்பு 1                            தொலைபேசி: 0112 477 000/ 0112 477 261/ 0112 398 788

 

Published Date: 

Thursday, April 8, 2021