2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித்தொழில் சட்டத்தின் கீழ் உரிமமளிக்கப்பட்ட நிதிக் கம்பனியொன்றான த பினான்ஸ் கம்பனி பிஎல்சி 2008 ஆண்டில் செலிங்கோ குழுமத்தினுள்ளான பல எண்ணிக்கையான நிதியியல் நிறுவனங்களின் தோல்வியினால் மோசமாகப் பாதிக்கப்பட்டது. அப்போதிருந்து கம்பனியின் நிதியியல் நிலைமை படிப்படியாக சீர்குலைந்து, உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய தேவையாகவுள்ள மோசமான திரவத்தன்மைப் பிரச்சனைகளுடன் தற்போது காணப்படுகின்றது. வாய்ப்புமிக்க முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கும் கம்பனியினை மீள்கட்டமைப்பதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அத்தகைய முயற்சிகள் இன்னும் பயனளிக்கவில்லை.
















