இலங்கை மத்திய வங்கி கொள்கை வட்டி வீதங்களை குறைத்திருக்கின்றது

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை 2019 ஓகத்து 22ஆம் நாளன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில், மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் 50 அடிப்படை புள்ளிகளால் முறையே 7.00 சதவீதம் 8.00 சதவீதமாக குறைப்பதற்குத் தீர்மானித்துள்ளது. நாணயச் சபையானது உள்நாட்டுப் பொருளாதாரத்திலும் நிதியியல் சந்தைகளிலும் அதேபோன்று உலகளாவிய பொருளாதாரத்திலும் தற்பொழுது காணப்படுகின்ற மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற அபிவிருத்திகளை மிகக் கவனமாக பகுப்பாய்வு செய்தமையினைத் தொடர்ந்து தற்போது நிலவும் தாழ்ந்த பணவீக்கம் மற்றும் விரும்பத்தக்க 4-6 சதவீத வீச்சில் சிறந்த முறையில் நிலைப்படுத்தப்பட்ட நடுத்தர கால பணவீக்கத் தோற்றப்பாடு காணப்படும் சூழலில் பொருளாதாரச் செயற்பாடுகளின் மீளெழுச்சிக்கு மேலும் ஆதரவளிக்கும் நோக்கத்துடன் இத்தீர்மானத்திற்கு வந்துள்ளது.

முழுவடிவம்

Published Date: 

Friday, August 23, 2019