காணி விலைச் சுட்டெண் - 2019 முதலரையாண்டு

இலங்கை மத்திய வங்கியினால் தொகுக்கப்படுகின்ற கொழும்பு மாவட்டத்திற்கான காணி விலைச் சுட்டெண் 2018இன் முதல் அரையாண்டுடன் ஒப்பிடுகையில் 13.6 சதவீத அதிகரிப்பினைப் பதிவுசெய்து 2019 முதல் அரையாண்டின் போது 132.2 சுட்டெண்களை அடைந்தது. காணி விலைச் சுட்டெண்ணின் மூன்று துணை விலைச் சுட்டெண்களான அதாவது, வதிவிட, வர்த்தக மற்றும் கைத்தொழில் துணைச் சுட்டெண்கள் இவ்வதிகரிப்பிற்கு பங்களிப்புச் செய்தன. 

கைத்தொழில் காணி விலைச் சுட்டெண்ணானது 14.9 சதவீதம் கொண்ட ஆண்டிற்கு ஆண்டு அதிகூடிய அதிகரிப்பினை பதிவு செய்த அதேவேளைஇ வர்த்தக காணி விலைச் சுட்டெண் மற்றும் வதிவிடக் காணி விலைச் சுட்டெண் என்பன முறையே 13.2 சதவீதத்தினாலும் 12.8 சதவீதத்தினாலும் அதிகரித்தன. அதேவேளைஇ 2018இன் 2ஆம் அரைப் பகுதியிலிருந்து 2019 முதலாம் அரைப் பகுதி வரை காணி விலைச் சுட்டெண் 5.1 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

முழுவடிவம்

Published Date: 

Tuesday, September 3, 2019