2019 யூலையில் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (தேநுவிசு 2013=100)  ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம் 2019 யூனின் 2.1 சதவீதத்திலிருந்து 2019 யூலையில் 2.2 சதவீதமாக சிறிதளவு அதிகரித்தமைக்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டினதும் பொருட்களின் விலைகளிலான மாதாந்த அதிகரிப்புக்களே காரணமாக அமைந்தன. அதேவேளை, 2019 யூலையில் ஆண்டிற்கு ஆண்டு உணவு மற்றும் உணவல்லாப் பணவீக்கம் முறையே -2.5 சதவீதத்தினையும் 6.1 சதவீதத்தினையும் பதிவுசெய்தது.  

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்படுகின்ற தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றமானது 2019 யூனின் 2.0 சதவீதத்திலிருந்து 2019 யூலையில் 1.9 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது. 

மாதாந்த மாற்றத்தினைக் கருத்திற்கொள்ளும் போது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணானது 2019 யூலையில் 0.2 சதவீதத்தினால் அதிகரித்;ததுடன், இதற்கு உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமான பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட அதிகரிப்புக்களே காரணமாக அமைந்தன. உணவு வகையினுள் பச்சை மிளகாய், உடன்மீன், உருளைக்கிழங்கு என்பனவற்றின் விலைகள் அதிகரிப்புக்களைப் பதிவுசெய்தன. இதற்கு மேலதிகமாக, உணவல்லா வகையினுள், வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு மற்றும் ஏனைய எரிபொருட்கள்; அத்துடன் பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார துணை வகைகளின் விலைகள் மாதகாலப்பகுதியில் அதிகரித்தன.

முழுவடிவம்

Published Date: 

Wednesday, August 21, 2019