வாடிக்கையாளரின் நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்குகளிலிருந்தும் அதேபோன்று அட்டைக் கொடுப்பனவு வசதிகளிலிருந்தும் அதேநேர வங்கிகளுக்கிடையிலான நிதியியல் மாற்றல்கள் போன்ற இலத்திரனியல் கொடுப்பனவு (இ-கொடுப்பனவு) முறைகள் வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த சௌகரியத்தினை வழங்குகின்றன. வாடிக்கையாளர் நிதியங்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு இலங்கையின் கொடுப்பனவு முறைமைகளும் உட்கட்டமைப்பும் பன்னாட்டு பாதுகாப்புத் தரநியமங்களுக்கு ஏற்றவிதத்தில் காணப்படுகின்றன. இவ்வசதிகளைத் தொடர்ச்சியாக அனுபவிக்கும் பொருட்டு இ-கொடுப்பனவுகளை மேற்கொள்ளுகின்றபோது போதியளவு பாதுகாப்பான வழிமுறைகளை வாடிக்கையாளர் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கமைய, தமது நடைமுறை அல்லது சேமிப்பு கணக்குகளை, கொடுப்பனவு அட்டைகளை அல்லது இலத்திரனியல் பணப்பைகளை (இ-பணப்பை) அணுகுவதற்கு மற்றும் பயன்படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய எவையேனும் தகவல்களைப் பகிருகின்றபோது வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.















