பன்னாட்டு நாணய நிதியம் இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் ஆறாவது மீளாய்வு தொடர்பில் அலுவலர் - மட்டத்திலான உடன்படிக்கையை அடைந்துள்ளது

இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்கள் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர்களின் கருத்துக்களேயன்றி அது பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபையின் கருத்தினைப் பிரதிபலிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இதுவரைக்கும் கண்டறியப்பட்ட விடயங்களின் அடிப்படையில் அலுவலர்கள் அறிக்கையினைத் தயாரிப்பதுடன் இது முகாமைத்துவத்தின் ஒப்புதலுக்குட்பட்டு, கலந்துரையாடல்களுக்கும் தீர்மானங்களுக்குமாக பன்னாட்டு நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படும்.

      • தற்போது பொருளாதாரத்தில் இடம்பெற்றுவருகின்ற மீட்சி மற்றும் சமூகக் குறிக்கோள்கள் என்பவற்றுக்கு ஆதரவளிக்கும் வகையில் இடைவெளியை வழங்குகின்ற அதேவேளை படுகடன் நிலைத்துநிற்கும் தன்மையை ஏற்படுத்தும் நோக்கில் இறை ஒழுக்கம் மற்றும் தாபனரீதியான சீர்த்திருத்தங்கள் தொடர்பிலான அதிகாரிகளின் அர்ப்பணிப்புக்களை நாம் வரவேற்கின்றோம்.
      • மத்திய வங்கி தொடர்பான புதிய சட்டமானது, நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலினை நோக்கியதான பாதையில் மேற்கொள்ளப்படுகின்ற திருப்புமுனையான சீர்திருத்தமாகவிருப்பதுடன் சிறந்த பன்னாட்டு நியமங்களுக்கு இணங்கிச்செல்லும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் ஆணை, ஆளுகை, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை என்பவற்றை பலப்படுத்தும்.
      • வர்த்தகம் மற்றும் முதலீட்டு தாராளமயமாக்கம், அரசிற்குச் சொந்தமான தொழில் முயற்சிகள் மீதான சீர்திருத்தங்கள் மற்றும் ஊழலுக்கு எதிரான முனைப்பான முயற்சிகள் என்பன இலங்கையின் போட்டித்தன்மை மற்றும் நடுத்தர கால வளர்ச்சியை பலப்படுத்துவதற்கு முக்கியமானவையாகும்.

மனுவெல்லா கொறேட்டி தலைமையிலான பன்னாட்டு நாணய நிதிய அலுவலர் குழுவொன்று, நான்கு வருட விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் துணைபுரியப்பட்ட இலங்கைப் பொருளாதாரத்தின் சீர்திருத்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆறாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல்களுக்காக 2019 செத்தெம்பர் 10-25 வரையான காலப்பகுதியில் கொழும்பிற்கு விஜயம் செய்திருந்தது. விஜயத்தின் இறுதியில் திருமதி. கொறேட்டி பின்வருமாறு அறிக்கையை வெளியிட்டார்:

“குழுவானது விரிவாக்கப்பட்ட நிதிய வசதியினால் ஆதரவளிக்கப்பட்ட நிகழ்ச்சித்திட்டத்தின் ஆறாவது மீளாய்வு தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் ஒரு புரிந்துணர்வினை எட்டியுள்ளது”. இம்மீளாய்வு தொடர்பில் நிலுவையிலுள்ள அனைத்துவிதமான நடவடிக்கைகள் மற்றும் அமைப்பியல்சார் அடிப்படை அளவுக்குறி என்பவற்றை அடுத்துவரும் சில வாரங்களில் முடிவுறுத்துவதற்கு அதிகாரிகள் படிமுறைகளை எடுத்துவருகின்றனர். 

“ஏப்பிறல் மாதத்தில் இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னரான காலப்பகுதியில் நாட்டில் பாதுகாப்பு நிலைமையை வழமைக்கு கொண்டுவருவதற்காகவும் பொருளாதாரம் மீதான இவ்வதிர்வின் தாக்கத்தை குறைப்பதற்காகவும் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை குழுவானது வரவேற்கின்றது. சுற்றுலாப் பயணிகளின் வருகைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் படிப்படியாக மீட்சியடைந்து வருவதன் காரணத்தினால் உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2019இல் 2.7 சதவீதமாக காணப்படுமென திருத்தியமைக்கப்பட்டதுடன் 2020இல் உண்மை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3.5 சதவீதத்திற்கு முன்னேற்றமடையுமென எறிவு செய்யப்படுகின்றது. பணவீக்கம் 2019–20 காலப்பகுதியில் அண்ணளவாக 4.5 சதவீத மட்டத்தில் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் என்பன அண்மைக்காலத்தில் வீழ்ச்சியடைந்தபோதிலும் 2018இன் இறுதிப்பகுதியில் ஏற்பட்ட நாணயமாற்று வீதத் திருத்தத்தினால் ஆதரவளிக்கப்பட்டு குறைந்தளவிலான இறக்குமதிகள் மற்றும் வலுவான ஏற்றுமதிகள் என்பவற்றின் காரணமாக நடைமுறைக் கணக்கு நிலுவை 2019இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.6 சதவீதத்திற்கு முன்னேற்றமடையுமென எறிவு செய்யப்பட்டுள்ளது. 

“பலவீனமான உலகத் தோற்றப்பாடு மற்றும் இலங்கையின் உயர்ந்த அளவிலான பொதுப்படுகடன் என்பவற்றின் பின்னணியில், பேரினப் பொருளாதார உறுதிப்பாட்டை பாதுகாப்பதற்கு காத்திரமான கொள்கைகளை நிலைப்படுத்துதல் மற்றும் தாபனரீதியான சீர்திருத்தங்களை அமுல்படுத்துதல் என்பன முக்கியமானவையாக காணப்படுகின்றன. 

“2018 அரசியல் நெருக்கடியின் நீடித்த தாக்கம் மற்றும் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் என்பன இறை செயலாற்றத்தை கணிசமாக பாதித்திருந்தன. மீதிகளை தீர்ப்பனவு செய்வது மற்றும் 2018 இலிருந்து மேற்கொள்ளப்பட்ட வெளியக ரீதியில் நிதியீட்டம் செய்யப்பட்ட மூலதன செயற்றிட்டங்களின் முற்கூட்டிய செலவினம் அதேபோன்று பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்தான மறைமுக அரசிறைகளின் கணிசமான வீழ்ச்சி என்பவற்றின் காரணமாக யூன் இறுதிக்கான இறை இலக்குகள் அதிகளவான வீச்சியினால் தவறவிடப்பட்டிருந்தன. ஐந்தாவது மீளாய்வுக் காலப்பகுதியின் போது ஏற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்ச்சித்திட்ட இலக்குகள் அடையக்கூடிய மட்டத்தில் இனிமேலும் காணப்படாத அதேவேளை 2019இற்கான வரவு செலவுத் திட்டத்தின் எஞ்சிய அரசிறை வழிமுறைகளை அமுல்படுத்தல் மற்றும் காத்திரமான செலவின முகாமைத்துவம் என்பனவற்றின் ஊடாக 2019இல் முதலாந்தர இறை மிகையானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 சதவீதத்தை அடைந்துகொள்வதற்கு அதிகாரிகள் கடப்பாடுடையவர்களாக இருக்கின்றனர். 

“நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் அடையப்பட்ட நன்மைகளை பாதுகாத்தல், உயர்ந்தளவான பொதுப்படுகடனை கீழ் நோக்கிய பாதையை நோக்கி நகர்வடையச் செய்தல் மற்றும் நன்றாக இலக்கிடப்பட்ட சமூக மற்றும் மூலதன செலவினங்களுக்காக இடைவெளியை வழங்குதல் என்பவற்றை அடைந்துகொள்வதற்காக 2020 மற்றும் நடுத்தரகாலப்பகுதியில் அரசிறையை அடிப்படையாகக் கொண்ட இறைத்திரட்சியை முன்னெடுப்பதற்கான அதிகாரிகளின் அர்ப்பணிப்புக்களை குழுவானது வரவேற்றிருந்தது. வரி அடித்தளத்தினை விரிவாக்குதல் மற்றும் இணங்குவிப்புக்களை செயல்படுத்தல் மற்றும் செலவின வினைத்திறனை பலப்படுத்தல் என்பவற்றின் ஊடாக அரசிறையை திரட்டுவதற்கு நிலைத்திருக்கக்கூடிய முயற்சிகள் தேவைப்படுகின்றன. பொதுப்படுகடன் நிலைத்திருக்கும் தன்மையைப் பேணுவதற்கு இறை விதிமுறைகளை சீரமைத்தல் மற்றும் சிறந்த சர்வதேச நியமங்களுக்கு இணங்கிச்செல்லும் வகையில் நடுத்தர காலத்தில் சுயாதீனமான பொதுப்படுடன் முகாமைத்துவ முகவராண்மையை தாபித்தல் என்பன தொடர்பில் அதிகாரிகளின் திட்டங்களை குழுவானது வரவேற்றுள்ளது. சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் நிதியியல் செயலாற்றத்தை முன்னேற்றுதல் மற்றும் செலவின வினைத்திறனின்மை மற்றும் வலுத்துறையில் காணப்படும் மானியம் உள்ளடங்கலாக வலுத்துறையின் சீர்திருத்தங்களை முன்னெடுத்தல் என்பன இறை இடர்நேர்வுகளை குறைப்பதற்கான முக்கியமான படிமுறைகளாகக் காணப்படுகின்றன. 

“இலங்கை மத்திய வங்கியின் காத்திரமான மற்றும் தரவில்–தங்கியிருக்கும் நாணயக்கொள்கை அணுகுமுறை மற்றும் நிகழ்ச்சித்திட்டத்தின் புரிதல்களுடன் இணங்கிச்செல்லும் வகையில் ஒதுக்கு தாங்கியிருப்புக்களை பலப்படுத்துதல் என்பவற்றிற்கான அவற்றின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்புக்களை குழுவானது ஆதரவளித்திருந்தது. இலங்கை மத்திய வங்கியானது செலாவணிவீத நெகிழ்வுத்தன்மைக்கு தொடர்ச்சியாக அனுமதிக்க வேண்டுடப்படுவதுடன் இறுக்கமான உலக நிதியியல் நிலைமைகளிலிருந்தான அழுத்தங்கள் தீவிரமானதாக காணப்படும் சந்தர்ப்பத்தில் அதிகளவான தளம்பல்களை தணிப்பதற்கான செலாவணித் தலையீடுகளை மட்டுப்படுத்துதல் வேண்டும். மத்திய வங்கி தொடர்பான புதிய சட்டமானது, நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடலினை நோக்கியதான பாதையில் மேற்கொள்ளப்படுகின்ற திருப்புமுனையான சீர்திருத்தமாகுவதுடன் சிறந்த பன்னாட்டு நியமங்களுக்கு இணங்கிச்செல்லும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் ஆணை, ஆளுகை, பொறுப்புக்கூறும் தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை என்பவற்றை பலப்படுத்தும்.

“இலங்கை மத்திய வங்கி பயங்கரவாதத் தாக்குதலுக்குப்பின்னரான காலப்பகுதியில் சுற்றுலாத்துறைக்கு ஆதரவளிப்பதற்கும் கொடுகடன் நிலைப்பாடுகளை இலகுபடுத்துவதற்கும் படுகடன் பணியின் சட்டரீதியான காலதாமதம் மற்றும் வங்கி வட்டி வீதங்களின் உச்சவரம்பு உள்ளடங்கலாக தற்காலிக வழிமுறைகளை மேற்கொண்டிருந்தது. பலவீனமான கொடுகடன் தரம் மற்றும் வீழ்ச்சியடைகின்ற இலாபத்தன்மை என்பவற்றுக்கு மத்தியில் நிதியியல் முறையில் ஏற்படக்கூடிய திரிபுபடுத்தல்களை தவிர்ப்பதற்கு கடன் நிலைமைகள் உறுதித்தன்மை அடைந்ததுடன் விதிவிலக்கான இத்தகைய நடவடிக்கைகள் அகற்றப்படல் வேண்டும். வங்கி மற்றும் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களுக்கான ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக தற்போது மேற்கொள்ளப்படும் முயற்சிகளை குழு வரவேற்கின்றது. பேரண்ட முன்மதியுடைய கொள்கை கட்டமைப்பு மற்றும் அழுத்தம் பரீட்சிப்பு இயலுமை என்பவற்றை மேம்படுத்தல் மற்றும் நிகழத்தக்க கட்டமைப்பை தரமுயர்த்துதல் போன்றன தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் திட்டங்கள் என்பனவும் நிதியியல் உறுதிப்பாட்டிற்கு பங்களிப்பு செய்யும். பணத்Àயதாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நிதியிடல் போன்றவற்றைப் பலப்படுத்துதல் தொடர்பில் அதிகாரிகள் முன்னேற்றம் கண்டுள்ளனர். 

“சாத்தியமானதொரு அரசிறை தாக்கங்களை தீர்க்கின்ற அதேவேளை வர்த்தக மற்றும் முதலீட்டு சூழலை படிப்படியாக தாராளமயமாக்குவதன் மூலம் போட்டித்தன்மை மற்றும் நடுத்தரகால வளர்ச்சியை பலப்படுத்துவதற்கான அதிகாரிகளின் தற்போதைய திட்டங்களை குழுவானது வரவேற்கின்றது. குறிப்பாக அரசிற்கு சொந்தமான தொழில் முயற்சிகளின் ஆளுகை மற்றும் வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்துதல், ஊழலை தடுத்தல் அதேபோன்று பெண்களின் பொருளாதார வலுëட்டல்களை ஊக்குவிப்பதற்கான படிமுறையான முயற்சிகள் மற்றும் சமூக மாற்றல் கொடுப்பனவுகள் அதிகளவில் தேவைப்படுபவர்களை இலக்கிடல் என்பவற்றை அடைந்துகொள்வதற்கான அர்ப்பணிப்பின் ஊடாக இத்தகைய திட்டங்கள் ஆதரவளிக்கப்படல் வேண்டும். 

குழுவானது பிரதம மந்திரி விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் சமரவீர, நிதி இராஜாங்க அமைச்சர் விக்கிரமரத்ன, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் குமாரசுவாமி, திறைசேரி செயலாளர் சமரதுங்க, சிரேஸ்ட பிரதி ஆளுநர் வீரசிங்க, பாராளுமன்ற எதிர்கட்சியின் பிரதிநிதிகள், ஏனைய அரச அலுவலர்கள் மற்றும் வியாபார சமூகத்தினரின் பிரதிநிதிகள், உள்ளுர்; சமூகம் மற்றும் பன்னாட்டுப் பங்காளர்கள் ஆகியோரைச் சந்தித்திருந்தது.

Published Date: 

Tuesday, September 24, 2019