Subscribe to Central Bank of Sri Lanka RSS

செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களுக்கு சனாதிபதியினால் 'தேசமான்ய" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது

உன்னதமிக்க மற்றும் தலைசிறந்த சேவையினை தாய் நாட்டிற்கு வழங்கியமைக்காக புகழ்பெற்ற ஆளுமைமிக்கவர்களுக்கான 'தேசிய கௌரவம்" அதிமேதகு சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் 2019 ஓகத்து 19ஆம் திகதியன்று வழங்கி வைக்கப்பட்டது. 

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசுவாமி அவர்களுடன் மேலும் ஐந்து ஆளுமைமிக்கவர்களுக்கு சனாதிபதியினால் 'தேசமான்ய" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

'தேசமான்ய" என்பது குடியியல் கௌரவமாக இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் இரண்டாவது அதியுயர்வான தேசிய கௌரவமாகும். இது தேசத்திற்கு வழங்கிய உன்னதமிக்க மற்றும் தலைசிறந்த சேவையினை அடையாளப்படுத்தி வழங்கப்படுகின்றது.

வௌிநாட்டுத் துறைச் செயலாற்றம் - 2019 யூன்

வர்த்தகப் பற்றாக்குறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சுருக்கத்தின் காரணமாக 2019 யூனில் வெளிநாட்டுத் துறை மேலும் வலுவடைந்த வேளையில் நாட்டிற்கான இரு பன்னாட்டு முறிகளின் வழங்கலிலிருந்தான பெறுகைகளின் காரணமாக மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் பெருமளவிற்கு அதிகரித்தன.   

2019 யூனில், வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை ஐ.அ.டொலர் 316 மில்லியன்களுக்கு குறுக்கமடைந்தது. இது, 2010 ஒத்தோபருக்குப் பின்னர் ஏற்பட்ட மிகக்குறைந்ததொரு அளவாகும்.

இக்குறிப்பிடத்தக்க குறைப்பிற்கு இறக்குமதிச் செலவினம் 23.1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தமையும் ஏற்றுமதி வருவாய்கள் 5.8 சதவீதத்தினால் (ஆண்டிற்கு ஆண்டு) அதிகரித்தமையுமே காரணமாகும். 

"இலங்கை பொருளாதார, சமூகப் புள்ளிவிபரங்கள் - 2019" வெளியீடு

இலங்கை மத்திய வங்கி, இலங்கையின் பொருளாதார சமுகப் புள்ளிவிபரங்கள் - 2019 என்ற இலங்கை மத்திய வங் கியின் வருடாந்த வெளியீடு தற்பொழுது பொதுமக்களுக்குக் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.

இவ்வெளியீடானது, தேசிய கணக்குகள், வேளாண்மை, கைத்தொழில், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் நிதி, அரசநிதி, வங்கித்தொழில் மற்றும் நிதியியல் நிறுவனங்கள், பணம் மற்றும் மூலதனச் சந்தைகள், விலைகள் மற்றும் கூலிகள், குடித்தொகை மற்றும் தொழிற்படை, போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், தொலைத் தொடர்பூட்டல் பணிகள், காலநிலை ஆகிய துறைகளிலுள்ள இலங்கையின் பொருளாதார, சமூகக் குறிகாட்டிகளையும் ஏனைய நாடுகளிலுள்ள பொருளாதார, சமூகக் குறிகாட்டிகள் மீதான தெரிந்தெடுக்கப்பட்ட தகவல்களையும் உள்ளடக்கியுள்ளது. 

இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் – 2019 யூலை

2019 யூலையில் தயாரிப்பு நடவடிக்கைகள் மேலும் உயர்ந்த வீதத்தில் விரிவடைந்து 55.7 கொண்ட பெறுமதிச் சுட்டெண் ஒன்றினைப் பதிவுசெய்தன. இதுஇ 2019 யூனுடன் ஒப்பிடுகையில் 1.8 சுட்டெண் புள்ளிகளைக் கொண்டதொரு அதிகரிப்பாகும். தயாரிப்புஇ கொள்வனவு முகாமைத்துவச் சுட்டெண்ணில் ஏற்பட்ட விரிவிற்கு புதிய கட்டளைகளிலும் அதனைத் தொடர்ந்து உற்பத்தியிலும்இ குறிப்பாகஇ உணவு மற்றும் குடிபானத் துறையின் தயாரிப்பில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாகும். புதிய கட்டளைகளில் ஏற்பட்ட அதிகரிப்பிற்கு உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்பான இடையூறுகளிலிருந்து பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்தமையே காரணமாகும். அதேவேளைஇ யூலை மாதகாலப்பகுதியில் தொழில்நிலை மெதுவான வீதத்தில் அதிகரித்த போதும் புடவை மற்றும் ஆடை தொழில்துறையிலுள்ள பல பதிலிறுப்பாளர்கள் இம்மாத காலப்பகுதியில் தாம் உயர்ந்த வீத தொழிலாளர் புரள்வினை எதிர்நோக்கியமையினை முக்கியமாகக் குறிப்பிடுகின்றனர்.

முதனிலை வணிகர் தொடர்பான ஒழுங்குமுறைப்படுத்தல் நடவடிக்கை - பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி

பதிவுசெய்யப்பட்ட பங்குகள் மற்றும் பிணையங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டம் என்பனவற்றின் கீழ் செய்யப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல்கள் அடிப்படையான செயற்பாட்டிற்கிணங்க, இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் வகையில் 2019 ஓகத்து 15ஆம் திகதி மு.ப. 10 மணியிலிருந்து நடைமுறைக்குவரும் விதத்தில் பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியின் முதனிலை வணிகர் அலகினை அதன் முதனிலை வணிகர் வியாபாரம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இடைநிறுத்தலை மேலும் ஆறு மாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்குத் தீர்மானித்திருக்கிறது.

இவ்வொழுங்குப்படுத்தல் நடவடிக்கையானது அரச பிணையங்களுக்கான முதனிலை ஏலங்களை  பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சி அணுகுவதனை இடைநிறுத்துகின்றது என்பதனை இலங்கை மத்திய வங்கி வலியுறுத்த விரும்புகின்றது. இது பான் ஏசியா பாங்கிங் கோப்பிரேசன் பிஎல்சியின் ஏனைய நடவடிக்கைகள்ஃ பணிகளில் எந்தவித தாக்கத்தினையும் ஏற்படுத்தாது.

முனைவர் (திருமதி) துஷ்னி வீரகோன் நாணயச் சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்

முனைவர் (திருமதி) துஷ்னி வீரகோன், 2019 யூலை 29ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும்வகையில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

முனைவர் (திருமதி) துஷ்னி வீரகோன், இலங்கை கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் அதன் பேரண்டப் பொருளாதாரக் கொள்கை ஆராய்ச்சித் தலைவருமாவார்.   அவர், தனது முனைவர் பட்டத்தினை நிறைவு செய்து 1994இல் இலங்கை கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனத்தில் இணைந்ததுடன் பேரண்ட பொருளாதாரக் கொள்கை, பிராந்திய வர்த்தக ஒருங்கிணைப்பு மற்றும் பன்னாட்டுப் பொருளாதாரங்கள் தொடர்பில் பரந்தளவில் எழுதி வெளியிட்டுள்ளார்.

Pages

சந்தை அறிவிப்புகள்